தளபதியை அடுத்து தனுசை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்.. வசூல் வேட்டையில் டாக்டர்

இதுவரை எந்தவொரு முன்னணி நடிகர் அல்லாத படங்கள் செய்யாத சாதனையை நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் புரிந்துள்ளது. வளர்ந்து வரும் இளம் நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான டாக்டர் படம் தற்போது வரை வெற்றிகரமாக ஓடி வசூல் மழையை பொழிந்து வருகிறது.

நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நெல்சன் தான் டாக்டர் படத்தையும் இயக்கி உள்ளார். படத்தை கூட காமெடி கலந்து எடுக்க முடியும் என்பதை நெல்சன் நிரூபித்து விட்டார். படம் தொடங்கியது முதல் முடியும் வரை தியேட்டரில் சிரிப்பலை அடங்கவே இல்லை என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவிற்கு படத்தில் காமெடிக்கு பஞ்சம் இல்லை. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, குக் வித் கோமாளி புகழ் தீபா என நெல்சன் மிகவும் நேர்த்தியான கதாபாத்திரங்களை தேர்வு செய்துள்ளார். டாக்டர் படம் வெளியான பின்னர் ஆயுத பூஜையை முன்னிட்டு சுந்தர் சி ஆர்யா நடிப்பில் அரண்மனை 3 படம் வெளியானது. ஆனால் அப்படி இருந்தும் டாக்டர் படத்திற்கு கூட்டம் குறையவே இல்லை.

அப்படி என்ன சிவகார்த்திகேயன் இதுவரை இல்லாத சாதனையை புரிந்து விட்டார் என்று தானே கேட்கிறீர்கள். ஆம் புதிய சாதனை தான். வளர்ந்து வரும் நடிகரான இவர் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான மாஸ்டர், கர்ணன் ஆகிய படங்களின் வசூலை விட அதிக வசூல் புரிந்து சாதனை படைத்துள்ளார். இது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

டாக்டர் படம் முதல் நாள் மட்டும் 8 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல் வாரத்தில் சுமார் 25.50 கோடியும், இரண்டாவது வார இறுதியில் மொத்தம் 35.19 கோடியும் வசூல் செய்துள்ளதாம். இது மாஸ்டர் மற்றும் கர்ணன் ஆகிய படங்களின் வசூலை விட அதிகமாம். இனி சிவகார்த்திகேயன் காட்ல அடைமழை தான்.

லண்டனில் முகேஷ் அம்பானி வாங்கிய ஸ்டாக் பார்க் மாளிகை.. ஷங்கர் பட செட் போல் பிரம்மாண்ட புகைப்படம்

ஆசியாவில் மிகப்பெரிய செல்வந்தராக வலம் வருபவர் தான் முகேஷ் அம்பானி. ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரான முகேஷ் அம்பானி மகாராஷ்டிராவில் உள்ள ஆண்டிலியாவில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கொரோனா பெரும் தொற்றுகாலம் முழுவதும் ...