தளபதியுடன் நடிக்க 5 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகை.. அறிமுக நாயகிக்கு இவ்வளவா.?

நடிகர் விஜய் படத்தில் நடிப்பதற்காக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அதிக சம்பளத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளார். நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதும் இப்படத்தை தில் ராஜு இயக்க உள்ளதும் தெரிந்த தகவல் தான்.

ஆனால் முன்னதாக பைரவா, சர்க்கார் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கீர்த்தி சுரேஷ் தளபதி 66 படத்தில் இணைந்து நடிப்பார் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடிக்கவில்லை என்பது தெரியவந்து உள்ளது.

இதனையடுத்து பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். மேலும் இந்த படத்திற்காக இவருக்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம். இந்த தொகை தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவின் சம்பளத்தைவிட அதிகம் என கூறுகிறார்கள்.

கியாரா அத்வானி தற்போது பிரம்மாண்டமாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் ராம் சரண் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கும் இவர் இதே அளவிற்கு தான் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கியாரா அத்வானி என்னதான் பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்தாலும் தமிழ் சினிமாவிற்கு அவர் தற்போது தான் அறிமுகமாகிறார். எனவே அறிமுக நடிகைக்கு இவ்வளவு சம்பளமா என கோலிவுட் நடிகைகள் பொறாமையில் பொங்கி வருகிறார்கள்.