தளபதியின் 66வது படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுதான்.. பக்கா மாஸ் கேரக்டர்!

தமிழ் சினிமாவின் ரசிகர்களின் இளைய தளபதியாக விளங்கும் நடிகர் விஜய் தனது 65வது படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்புகள் டெல்லியில் நடைபெற்றுள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அண்மையில் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியிட்டு  படக்குழுவினர் தெறிக்க விட்டனர். இந்த சூழலில் தற்போது நீண்ட நாட்களாக தளபதியின் 66வது படத்தை பற்றிய தகவல்களை அவருடைய ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

அதன்படி தற்போது வெளியான தகவலின்படி தில் ராஜூ தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதியின் 66வது படம் தயாராக உள்ளது. எனவே தளபதியின் 66வது படத்தில் தளபதி விஜயின் கேரக்டர் என்ன என்பது பற்றி அவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் தளபதி விஜய், காடுகள் மற்றும் இயற்கை வளங்கள் அழிந்து வரும் சூழலை எதிர்த்து பேசும் பத்திரிக்கையாளராக மாறிய வைல்ட் லைப் புகைப்பட கலைஞராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் தளபதி விஜய் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளதால் ரசிகர்களின் மத்தியில் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இந்தத் தகவலை கேட்ட தளபதியின் ரசிகர்கள் விஜய்யின் வித்தியாசமான நடிப்பை தளபதியின் 66 ஆவது படத்தில் பார்க்கலாம் என எதிர்நோக்கி காத்துள்ளனர்.