தளபதியின் பீஸ்ட் திரைப்படம் எப்படி இருக்கு.? வெளியான முதல் யுஏஇ விமர்சனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் உலக அளவில் வெளியாகி இருக்கிறது. பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்படத்துக்கு வெளிநாட்டிலும் நல்ல ஆதரவு இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது யுஏஇ விமர்சனம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இப்படம் குவைத், கட்டார் போன்ற இடங்களில் தடை செய்யப்பட்டிருந்தாலும் மற்ற இடங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் வெளிநாட்டு ரசிகர்கள் படத்தை பற்றிய தங்கள் கருத்துக்களை தங்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, விஜய்யின் முந்தைய படங்களை காட்டிலும் இந்த படம் வேற லெவலில் இருப்பதாகவும், அவருடைய ஒவ்வொரு காட்சியும் பலத்த கைத்தட்டல் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சமீப காலமாக விஜய் தன்னுடைய திரைப்படங்களில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி வருகிறார். அந்த வகையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு ஆக்சன் காட்சிகளும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் விஜய்யின் பர்பாமன்ஸ் பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்று கூறியுள்ளனர்.

அற்புதமான கதை களம், மிரட்டலான காட்சிகள் என்று ஒவ்வொரு நிமிடமும் ரசிகர்களை பயங்கர எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழில் எந்த அளவுக்கு இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதேபோன்று தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.

அந்த எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல் இயக்குனர் நெல்சன் படத்தை வேற லெவலில் கொடுத்திருக்கிறார். இவரின் முந்தைய வெற்றி திரைப்படங்களான டாக்டர் கோலமாவு கோகிலா வரிசையில் இந்த படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமையும் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஏப்ரல் 14 அதாவது நாளை பான் இந்தியா திரைப்படமான கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இது உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாகும். இருப்பினும் தமிழ்நாட்டில் பீஸ்ட் திரைப்படத்திற்கு தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்படத்திற்கு 800 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு வெளியாகியுள்ளது.