தளபதியின் அந்த படத்தின் வசூலை முறியடிக்கும் பீஸ்ட்.. முதல்நாளே இருக்கு தரமான சம்பவம்

தளபதி விஜய் தன்னுடைய 65வது படமான பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி சினிமா ரசிகர்கள் அனைவருமே இப்படத்தை பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இப்படத்தை இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயற்றியுள்ளார்.

நெல்சன் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டாக்டர் படம் வசூலில் வேட்டையாடியது. இந்நிலையில் அடுத்த படமே தளபதியை வைத்து இயக்கியுள்ளார். பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் திரைக்கதை மிகவும் சுவாரசியமாக இருக்கும் என கூறப்படுகிறது.

பீஸ்ட் படத்திற்காக தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 800 திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் சர்கார் படத்தின் வசூலை பீஸ்ட் படம் முறியடிக்கும் என கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது விஜய்யின் நடிப்பு தான்.

ஏனென்றால் இப்படத்தில் விஜய்யின் நடிப்பு அனைவரையும் பிரமிக்கச் செய்யும் அளவிற்கு இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் பீஸ்ட் படத்திற்காக மறுநாள் கே ஜி எஃப் 2 படம் வெளியானாலும் பீஸ்ட் படத்தின் வசூலை பாதிக்காது என விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.

இந்நிலையில் சர்கார் படம் விடுமுறை நாட்களில் வெளியாகி வசூல் சாதனை படைத்த நிலையில் பீஸ்ட் படம் வேலை நாட்களில் வெளியானாலும் அப்படத்தின் வசூலை முறியடிக்கும் என கூறப்படுகிறது. மேலும் அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளதால் பீஸ்ட் படம் வசூலில் வேட்டையாடும் என கூறப்படுகிறது.

மேலும் இயக்குனர் நெல்சனின் முதல் இரண்டு படங்களான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் வெற்றியும் உறுதியான நிலையில் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கயுள்ளார் நெல்சன். மேலும் விஜய் ரசிகர்கள் தற்போது ஆரவாரத்துடன் உள்ளனர்.