தல அதிகமாக ஒ*** வார்த்தையை பேசுவார்.. பரபரப்பைக் கிளப்பிய பிரபல குணச்சித்திர நடிகர்

தல அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இடம் பெற்று தற்போது கோடான கோடி ரசிகர்கள் இவரின் திரைப்படத்திற்காக காத்திருக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இந்த நிலையில் இவரது ஆரம்ப காலகட்ட திரைப்பட வாழ்க்கையை பற்றி இவருடன் பணிபுரிந்த பல நடிகர்கள், இயக்குனர்கள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து தல அஜித்தை பற்றிய சில ரகசிய தகவல்களை கூறியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு, நடிகர் பிரசன்னாவின் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் திரைப்படத்தையும் நடிகர் விமலின் புலிவால் திரைப்படத்தையும் மாரிமுத்து இயற்றினார். இந்த இரண்டு திரைப்படங்களின் தோல்வியை அடுத்து பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகர் தனுஷின் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான அட்ரங்கி ரே திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் அஜீத்துடன் தான் பணியாற்றிய அனுபவங்களை பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அஜித்திற்கு புகழ்ச்சி பிடிக்காது என்றும் யாராவது அவரை புகழ்ந்து பேசினால் அவர்களை பெருமளவு தவிர்க்க முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார். தான் சம்பாதிக்கும் பணத்தை அதிகமாக மற்றவர்களுக்கு கொடுத்து செலவு செய்யும் மனப்பான்மை உள்ள நடிகர் அஜித் மட்டும்தான் என்றும் ஒரு அற்புதமான மனிதன் அஜித் எனவும் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அஜித் அதிகமாக பேசும் கெட்ட வார்த்தையையும் அவர் பகிர்ந்துள்ளார். நடிகர் அஜித் நடித்த ஆசை திரைப்படத்தில மாரிமுத்து உதவி இயக்குனராக பணியாற்றிய போது நடிகர் அஜித் ஒ*** நீ சும்மா இருக்க மாட்டியா என்பதை அதிகமாக பேசுவார்.

அந்தப்படத்தில் வேலை பார்க்கும் எங்கள் அனைவருக்கும் பீர் வாங்கி கொடுக்கும் அளவிற்கு எதார்த்தமான மனிதர் தல அஜித் என்று மாரிமுத்து தெரிவித்துள்ளார். இவர் கூறிய இந்த தகவலை கேட்ட அஜித்தின் ரசிகர்கள் தல அஜித் இப்படியெல்லாம் பேசுவாரா என்ற அளவிற்கு வாயை பிளந்து இருக்கின்றனர்.