தல அஜித்தை மிரட்டிய பாலா.. அந்த ரூம் உள்ள நடந்தது இதானாம்.. உண்மையை போட்டுடைத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் தனது திறமையால் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகர் அஜித். பல பிரச்சினைகளைத் தாண்டி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயரம் தொட்டிருக்கிறார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது எளிமையான தோற்றம் மற்றும் அன்பான குணம் காரணமாக பலருக்கும் இவர் ஃபேவரைட் நடிகராக உள்ளார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் பாலா நடிகர் அஜித்திற்கு மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நான் கடவுள் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அஜித் தான் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

தற்போது அஜித் ஏன் இப்படத்தில் நடிக்கவில்லை என்பதற்கான காரணம் வெளியாகி உள்ளது. அதாவது இயக்குனர் பாலா இப்படத்திற்காக அஜித்திடம் அதிக நாட்கள் கால்ஷீட் கேட்டதோடு, நீளமாக தலைமுடி வளர்க்க வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இயக்குனர் பாலா ஒரு நாத்திகவாதி ஆனால் அஜித் ஒரு ஆன்மீகவாதி என்பதால் இந்த கதை அஜித்துக்கு பிடிக்காமல் இருந்ததாம். மேலும் இயக்குனர் பாலா, அஜித்திடம் முழு கதையை கூறவில்லையாம். இதுதவிர அடிக்கடி தனது படங்களில் பாலா கதைகளை மாற்றுவது வழக்கம் என்பதால் அச்சமுற்ற அஜித் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என அட்வான்ஸ் வாங்கிய பின்னர் மறுத்துள்ளார்.

அட்வான்ஸ் வாங்கிய பின்னர் நடிக்க மாட்டேன் என அஜித் கூறியதால், ஆத்திரமடைந்த பாலா அஜித்துக்கு மிரட்டல் விடுத்ததாக பிரபல நடிகர் பயில்வான் தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் வட்டாரத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.