முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தலைவி திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்தார். இதில் இவர் நடிப்பிற்கு பெரும் பாராட்டு கிடைத்தது. இத்திரைப்படத்தை ஏஎல் விஜய் இயக்கி இருப்பார், எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தார்.

கங்கனா ரனாவத் தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக 2008ல் வெளியான தாம்தூம் படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். அதன்பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை பிறகு தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகை மட்டுமின்றி எழுத்தாளர், இயக்குனர் அடுத்து படத் தயாரிப்பிலும் ஈடுபட உள்ளார்.

கங்கனா ரனாவத் நடிக்க வருவதற்கு முன்பு மிகவும் கடினமான வாழ்க்கை வாழ்ந்துள்ளார் சாப்பிடுவதற்கு கூட உணவு கிடைக்காது தினமும் பிரட் தான் சாப்பிடுவார் அதற்கு தொட்டுக்கொள்ள கூட ஒன்றும் இருக்காது ஊறுகாய் கொண்டுதான் சாப்பிடுவாராம். இப்பொழுது பத்மஸ்ரீ 3 தேசிய விருது, பிலிம்பேர் விருது சிறந்த நடிகைக்கான விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

தலைவி படம் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றதோ அதே அளவு விமர்சனத்திற்கு உள்ளானது. தலைவி படத்தில் ஜெயலலிதா அவர்களின் நடிகை முதல் அரசியலில் எப்படி நுழைந்தார் வரை காட்டப்பட்டிருக்கும் நிறைய காட்சிகள் இடம் பெறவில்லை என்று ரசிகர்கள் கூறுவதால் தலைவி பார்ட் 2 படம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவி பார்ட் 2-வில் கங்கனா நடிப்பாரா என்று சந்தேகம் தான். ஏனென்றால், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் பிரபாஸ் உடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறி வருகிறார். மக்கள் ஆசைப்பட்டால் அரசியலுக்கு வருவேன் எனவும் கூறினார் இதனால் தலைவி பார்ட்-2 வில் கங்கனா ரனாவத் நடிப்பது சந்தேகம் தான்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் கங்கனா நடிப்பது சந்தேகம் தான் இதற்காக  நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இரண்டாம் பாகத்தில் நயன்தாரா நடித்தால் கண்டிப்பாக இந்திய அளவில் இந்தப் படம் பேசப்படும் என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை, பல விருதுகளையும் இந்த படம் தட்டிச் செல்ல வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.