தலைவி வசூல் உண்மை நிலவரம் இது தான்.. வெளிப்படையாக பேசிய தயாரிப்பாளர்.!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு உருவான படம் தலைவி. இப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனாவார். இவர் கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தலைவா, தேவி உட்பட பல படங்களை இயக்கியிருந்தார்.

தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்தசாமியும், ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் நடித்துள்ளனர். கங்கனா ரனாவத் ஏற்கனவே தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். தலைவி படம் விநாயகர் சதுர்த்தி வெளியீடாக கடந்த 10 ஆம் தேதி வெளியானது.

மிகவும் பொருட்ச்செலவில் உருவான இப்படம் மிக குறைவான அளவிலே வசூல் செய்ததாக தகவல் வெளியானது. அதாவது முதல் நாளில் இந்தியா முழுவதுமே சேர்த்து 1 கோடி கூட வசூலாகவில்லை என கூறப்பட்டது. கடந்த நான்கு நாட்களில் மொத்தமே 5 கோடிதான் வசூலித்துள்ளது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா காரணமாக தியேட்டரில் 50% இருக்கைகளுடன் மட்டுமே அரசு அனுமதியளித்ததால் படத்தின் வசூல் குறைந்ததாக காரணம் சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி இப்படத்தின்

மூலம் நல்ல வருமானம் கிடைத்துள்ளதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், படத்திற்காக செலவு செய்த பணத்தை தியேட்டர் அல்லாத வேறுவழிகளில் பெற்றுவிட்டோம் என அவர் கூறியுள்ளார்.

இதன் தமிழ், ஹிந்தி மொழிக்கான ஓடிடி உரிமை மட்டுமே 50 கோடிக்கு விலைபோனதாக ஆரம்பத்திலே தகவல் வந்தது. சாட்டிலைட் உரிமை சுமார் 30கோடி எனவும் கூறப்படுகிறது. இது இரண்டுமே கிட்டத்தட்ட 80 கோடி வந்துவிட்டது.

இப்படத்தின் மொத்த பட்ஜெட்டே அதிகபட்சம் 60 கோடிதான் இருக்கும் என கூறப்படுகிறது. தியேட்டர் மூலம் நல்ல லாபம் வராவிட்டாலும், ஓடிடி-யில் அதிகம் சம்பாரித்துவிட்டதாக கூறுகிறார்கள்.

பீஸ்ட், வலிமையுடன் மோதும் பிரம்மாண்ட படம்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வலிமை படம் ஒருவழியாக முடிவிற்கு வந்துள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை ...