தலைவி பட முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.? தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்.!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள படம் தான் தலைவி. பிரபல தமிழ் இயக்குனர் ஏ.எல்.விஜய் இப்படத்தை இயக்கி உள்ளார். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்பட்டது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் இப்படம் நேற்று வெளியானது. நாடு முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளிலும், வெளிநாடுகளில் சுமார் 200 திரையரங்குகளிலும் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படம் என்பதாலும், பான் இந்தியா படம் என்பதாலும் தலைவி படம் முதல் நாளே 20 கோடி முதல் 25 கோடி ரூபாய் வரை வசூலாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த அளவிற்கு தலைவி படம் குறைவான வசூல் அதுவும் திரையரங்குகள் வாயிலாக வந்திருப்பது ஒட்டுமொத்த சினிமா துறைக்கே பேரதிர்ச்சியாக உள்ளது. நாடு முழுவதும் பல கோடிகளை வசூலாக தலைவி படம் வாரி குவிக்கும் என்ற நம்பிக்கையில் தான் தலைவி படத்தை ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்குகளில் வெளியிட்டார்கள்.

இவ்வாறு பல பிரச்சனைகளை கடந்து திரையரங்குகளில் வெளியான தலைவி படத்தின் முதல் நாள் வசூல் வெறும் 40 முதல் 50 லட்சம் மட்டும் தானாம். குறைந்தது 20 கோடியாவது முதல் நாள் வசூலாகும் என எதிர்பார்க்கப்பட்ட படம் 50 லட்சத்தை கூட தாண்டாதது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான படத்தின் வசூல் ஒரே அடியாக சரிந்திருப்பது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விடலாம் என நினைத்திருந்த கங்கனா ரனாவத் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளார் என்று தான் கூறவேண்டும்.

இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு குறைவாக இருப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்காக கங்கனா ரனாவத் தமிழகத்திற்கு வந்து படத்தை பிரமோட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.