தலைவர்-169 படத்திலிருந்து தூக்கப்பட்டாரா நெல்சன்.? சோசியல் மீடியாவை ரணகளப்படுத்திய சம்பவம்

விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் கடந்த வாரம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் படத்தை பார்த்த பலரும் படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்று கூறிவருகின்றனர். இதனால் படம் வெளியான நாள் முதலிலிருந்தே இந்த திரைப்படத்தைப் பற்றிய செய்தி தான் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அதில் தற்போது ஒரு புதிய தகவல் கசிந்துள்ளது. அதாவது இயக்குனர் நெல்சன் இந்த பீஸ்ட் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பொழுதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்கவும் கமிட்டானார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சன் பிக்சர் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. மிகக் குறுகிய காலத்திலேயே சூப்பர் ஸ்டாரை இயக்கும் அளவுக்கு நெல்சன் வளர்ந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் இது பீஸ்ட் படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.

ஆனால் நெல்சனின் போதாத நேரம் பீஸ்ட திரைப்படம் பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேலும் இயக்குனரின் திரைக்கதையில் வேகம் இல்லை என்றும் பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படத்தை இயக்கப் போவது இல்லை என்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபகாலமாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வரும் ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை நெல்சனுக்கு கொடுத்தார். ஆனால் அவர் தற்போது இந்த முடிவு குறித்த ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

பீஸ்ட் திரைப்படம் குறித்து பரவும் விமர்சனங்களும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் பீஸ்ட் திரைப்படத்தை பார்த்து மிகவும் ஏமாற்றத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. இதனால்தான் அவர் நெல்சன் தன் படத்தை இயக்க வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார்.

இது குறித்த செய்திகளும் சில நாட்களாக அரசல் புரசலாக வெளிவந்தது. அதை உறுதி செய்யும் வகையில் நெல்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தலைவர் 169 படத்தை பற்றிய தகவலை நீக்கி இருந்தார். ஆனால் சிறிது நேரத்திலேயே மீண்டும் அதை பழையபடி மாற்றிவிட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் தற்போது குழப்பத்தில் இருக்கின்றனர்.

மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தயாரிப்பு நிர்வாகம் வெளியிடும் வரை நெல்சன் அமைதியாக இருக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. ஆகமொத்தம் பீஸ்ட் திரைப்படத்தால் நெல்சனுக்கு கிடைக்க இருந்த மிகப்பெரிய வாய்ப்பு தற்போது கைநழுவிப் போய் உள்ளது.

இந்த குழப்பத்தை தெளிவுபடுத்த பிரபல நிறுவனம் நெல்சனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்க தலைவர் படத்தில் இல்லையா என்று கேட்டுள்ளனர். ஆனால் நெல்சன் கண்டிப்பாக நான் தான் இயக்கப் போகிறேன் என்பதை உறுதி செய்துள்ளாராம்.