தலைநகரம் இரண்டாம் பாகத்தில் வடிவேலு இருக்காரா? கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி நடித்த சுராஜ் இயக்கத்தில் வெளியான படம் தலைநகரம். மலையாள ரீமேக்கான இப்படத்தில் நடிகை ஜோதிர்மயி மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்தனர். இப்படம் இயக்குனர் சுந்தர்.சி ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படமாகும்.

இப்படத்தில் நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரமான நாய் சேகர் மிகவும் பிரபலமானதாகும். நாய் சேகர் என்ற பெயரில் நடிகர் சதீஷ் நடிக்கும் திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது.

இப்படத்தின் இரண்டாம் பாகமான தலைநகரம்-2 உருவாக இருக்கிறது. இப்படத்தினை முகவரி, தொட்டி ஜெயா, இருட்டு ஆகிய படங்களை இயக்கிய துரை இயக்குகிறார். இருட்டு படத்திற்கு பிறகு சுந்தர்.சி, வி.இசட் துரை இணையும் இரண்டாவது படமாகும். ரைட் ஐ தியேட்டர்ஸ் சார்பில் எஸ்.எம். பிரபஹரன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படம் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டது தயாரிப்பாளர் தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் நடிகர் சுந்தர் சி, நடிகர்வடிவேலு ஆகியோரும் பட பூஜையில் கலந்து கொண்டனர். இப்படத்திற்கான நடிகர், நடிகை தேர்வு நடந்து வரும் நிலையில் வடிவேலு இப்படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.