தலகனத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஒரு கோடி கொடுத்தும் தெருக்கோடி தான்

ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக கதை தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்லாமல். பெண்களைத் தூக்கி நிறுத்தும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் பட்டையை கிளப்பி வருகிறார்.

க/பெ ரணசிங்கம், திட்டம் 2, கானா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இந்த படங்கள் பெண்களை போற்றும் விதமாக எடுத்தபடம்.

இப்பொழுது பெரிய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், பெண்களுக்கான கதை என்றால் முதலில் கதவைத் தட்டுவது ஐஸ்வர்யா ராஜேசின் வீட்டைத்தான். இதனால் டிமாண்ட் ஜாஸ்தி ஆகவே அம்மணி சம்பளத்தையும் ஜாஸ்தி படுத்த திட்டம் போட்டு விட்டார்.

வருபவர்களிடம் இனிமேல் சம்பளம் ஒரு கோடி, ஓகே என்றால் ஓகே என்று கூறி வருகிறாராம். இப்படித்தான் பல ஹிட் படங்களை கொடுத்த பிரபல இயக்குனர், ஐஸ்வர்யா ராஜேஷ்யிடம் கதை சொல்ல போனாராம்.

கதையை கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் கதையில் அங்கே அப்படி மாற்றுங்கள், இங்கே இப்படி மாற்றுங்கள், அவர் வேண்டாம், இவரை போடுங்கள் என அட்டகாசம் செய்கிறாராம். இதையெல்லாம் கேட்டவாறே எல்லாம் நேரம் என்று அந்த இயக்குனர் வேறு எதுவும் பேசாமல் யோசித்துக் கொண்டே இருந்தாராம்.

இப்படி பல கண்டிஷன்களை போட்டும் அதிக சம்பளம் கேட்டதால், வேறு ஹீரோயினை தேடுகின்றனராம். இப்படி அநியாயத்திற்கு தலக்கணம் பிடித்து நடந்து கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதுமட்டுமின்றி ஒரு கோடி கொடுத்தும், நாங்கள் நினைத்தவற்றை செய்ய முடியவில்லை என்றால் தெருக்கோடியில் தான் இருக்கணும் என்று இயக்குனர் நடையை கட்டிவிட்டாராம்.