தரமான வின்னரை உறுதி செய்த பிக் பாஸ் அல்டிமேட்.. ரசிகர்களின் விருப்பமும் அதுவே

முதன்முறையாக ஓடிடியில் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியான பிக்பாஸ் அல்டிமேட் சீசன்1 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

எனவே கடந்த ஜனவரி மாதம் 14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது இன்று தெரிந்துவிடும். இருப்பினும் தற்போது வரை பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், நிரூப் ஆகியோர் எலிமினேட் ஆகாமல் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மூன்று பேரில் பாலாஜி முருகதாஸ் டைட்டில் வின்னர் ஆக உறுதியாகி உள்ளது.

இவரைத் தொடர்ந்து இரண்டாவது இடம் ரம்யா பாண்டியனுக்கும், மூன்றாவது இடம் நிரூப்பிற்கும் கிடைக்கப்போகிறது. எனவே சிறப்பு விருந்தினர் யாராவது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களா என எதிர்பார்த்தனர்.

ஆனால் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர்களான முகின், ராஜு, ரித்விக்கா பிக்பாஸ் அல்டிமேட்டின் டைட்டில் வின்னருக்கு கொடுக்கப்படும் டிராபியை அறிமுகம் செய்து, அவர்களே சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள போகின்றனர் .

எனவே பிக் பாஸ் அல்டிமேட்டின் டைட்டில் வின்னரை ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே மக்கள் அளித்த ஓட்டின் அடிப்படையில் தரமான போட்டியாளரை தேர்வு செய்திருப்பதாக சோஷியல் மீடியாவில் பிக்பாஸ் ரசிகர்கள் கமெண்ட் அடிக்கின்றனர்.

அத்துடன் பிக் பாஸ் அல்டிமேட்டின் முதல் இடத்தைப் பிடித்த பாலாஜி முருகதாஸுக்கு பிக் பாஸ் சீசன்4ல் நழுவி சென்ற வெற்றி வாய்ப்பு தற்போது கிடைத்துவிட்டது என்று சமூகவலைதளங்களில் பிக்பாஸ் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.