தயாரிப்பை நிறுத்திவிட்டு வேறு ரூட்டில் லைகா.. போதும்டா இந்த சினிமா என எஸ்கேப்

தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்ட படங்களை தயாரித்துள்ள லைக்கா நிறுவனம் விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்துள்ளது. ஆனால் சமீப காலமாக லைக்கா நிறுவனத்திற்கு தொடர்ந்து தயாரிப்பு துறையில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அதாவது கதைகளை சரியாக கேட்ட அறியாமல் படத்தை தயாரித்து பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் தற்போது லைக்கா நிறுவனம் ஒரு சில ஆண்டுகள் படத்தை தயாரிப்பது நிறுத்திவிட்டு மற்றொரு துறையில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தயாரிப்பு துறையின் மூலம் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு போட்டி போட்ட லைக்கா தற்போது ஊடகங்களுடன் போட்டி போட உள்ளது.

அதாவது லைக்கா நிறுவனம் புதிதாக அரசியல் புலனாய்வு இதழ் என்ற ஊடகத்துறையை திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பல ஊடகங்களும் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். எந்த தயாரிப்பு நிறுவனமும் நெருங்க முடியாத அளவிற்கு லைக்கா நிறுவனம் பல படங்களை தயாரித்து வெற்றி பெற்றது.

அப்படி இருக்கும்போது ஊடகத் துறையில் நுழைந்தால் மற்ற அனைத்து ஊடக துறைகளும் இதனால் பாதிக்கும் என பலரும் கூறியுள்ளனர். மேலும் பல்லாயிரம் கோடிகள் செலவு செய்து கூட இவர்கள் ஊடகச் செய்திகளை வெளியிடுவார்கள். இதனால் பல ஊடகங்களும் பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஒரு சிலர் லைக்கா நிறுவனம் அரசியல் தலைவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஊடகத் துறையை கையில் எடுத்துள்ளதாக கூறி வருகின்றனர். மேலும் இதன்மூலம் பல அரசியல் தலைவர்கள் நட்பு ரீதியாக பழக முடியும் அதன் மூலம் அடுத்தடுத்து ரியல் எஸ்டேட் போன்ற பல துறைகளிலும் செயல்படலாம் என்பதற்காகத்தான் ஊடகத்துறையை லைக்கா நிறுவனம் தொடங்க உள்ளதாக கூறி வருகின்றனர்.

கொஞ்சம் ஓவரா தான் போற கேப்ரில்லா.. அதுக்குன்னு நடுரோட்டில் இப்படியா

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் காதலித்த ஜோடிகளை பிரித்து திருமணம் ஆக இருந்த மற்றொரு ஜோடி உடன் மாற்றி மாற்றி திருமணம் செய்து வைத்து விட்டனர். இதனால் ஒரே வீட்டில் காதலனும் ...