தயாரிப்பாளர்களை ஆட்டம் காணச் செய்த கவுண்டமணி.. ஹீரோவை விட கெத்து காட்டிய ஒரே காமெடியன்

ஒரு காலத்தில் காமெடி என்றாலே அது கவுண்டமணி தான் என்று சொல்லும் அளவிற்கு பெரும் புகழுடன் கொடிகட்டி பறந்தவர் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி. நடிகர் செந்திலுடன் இணைந்து இவர் செய்த அலப்பரைகள் ரசிகர்களை பெரிதும் ரசிக்க வைத்தது.

அதேபோல் காமெடி என்று வந்துவிட்டால் இவர் கொடுக்கும் கவுண்டர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் அடிமையாக இருந்தனர். இப்போதுவரை காமெடியில் இவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்ற அளவுக்கு புகழுடன் இருப்பவர். சினிமாவில் கணக்கற்ற திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது எந்த திரைப்படத்திலும் நடிப்பதில்லை.

ஆனால் அவர் நடித்த காலகட்டத்தில் கவுண்டமணி ரொம்பவும் கறார் பேர்வழியாக இருந்திருக்கிறார். இவர் சினிமா வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு முன்னேறி வந்துள்ளார். அப்போது காமெடியன் என்றாலே யாரும் அந்த அளவுக்கு மதிக்க மாட்டார்கள்.

அதன் காரணமாகவே கவுண்டமணி ஹீரோவுக்கு இணையாக வளர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தார். இவருக்கு பேசப்பட்ட சம்பளம் சரியாக வந்து சேராவிட்டால் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் அதை எப்படியாவது கேட்டு வாங்கி விடுவார்.

அதே போன்று பணம் அல்லது காசோலை வந்து சேராவிட்டால் டப்பிங் பேசவே வர மாட்டாராம். பேசியபடி மொத்த பணமும் கைக்கு வந்தால் தான் அந்த படத்தின் வேலைகளை முடித்துக் கொடுப்பாராம். அதேபோன்று ஹீரோவுக்கு இணையாக இருந்த ஒரே காமெடியனும் இவர்தான்.

இவர் படப்பிடிப்புக்கு தினமும் விதவிதமான கார்களில் வந்து இறங்குவாராம். அதேபோன்று ஹீரோக்களுக்கு எந்த தரத்தில் ஆடைகள் கொடுக்கப்படுகிறதோ அதே போன்றுதான் இவருக்கும் கிடைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் கண்டிப்பாகக் கூறி விடுவாராம்.

இதைப்பற்றி எல்லாம் அவரிடம் யாராவது கேட்டால் வாழ்க்கையை முடிந்த வரை அனுபவித்து வாழவேண்டும் என்று கூறுவார். அந்த வகையில் கவுண்டமணி தற்போது வரை தனக்கு பிடித்த ஒரு ராஜ வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.