தயாரிப்பாளரை தொங்கலில் விட்ட வெற்றிமாறன்.. தளபதி விஜய் படத்தால் கிளம்பிய சர்ச்சை

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். என்னதான் நகர்புற கதைகளை மையமாகக் கொண்டு பல படங்கள் வெளியானாலும் கிராம கதையம்சம் உள்ள படங்களை இயக்குவது ஒரு சில இயக்குனர்கள் தான். அப்படி கிராமம், ஆக்க்ஷன்  கதைகளை மையமாக வைத்து படங்கள் இயக்கி வெற்றி கண்டவர்கள் வரிசையில் வெற்றிமாறனுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு.

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம், விசாரணை மற்றும் வடசென்னை போன்ற அனைத்து படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அது மட்டுமில்லாமல் இந்த படங்களின் வெற்றி மூலம் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு சென்றார் வெற்றிமாறன்.

தற்போது முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் காமெடி நடிகர் சூரி வைத்து விடுதலை எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஒரு கான்ஸ்டபிள் தன் வாழ்க்கையில் என்னென்ன தியாகங்களும், சோதனைகளும் சந்திக்கிறார் என்பதை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு பிறகு வாடிவாசல் படத்தில் சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கி வருகிறார். ஆனால் தற்போது சொன்ன வார்த்தையை காப்பாற்றவில்லை என வெற்றிமாறன் படத்தின்  தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். அதாவது விடுதலை படத்தை 3 மாதத்தில் முடித்து விடுவேன் எனக் கூறினார். ஆனால் இன்றுவரை சூட்டிங் செல்கிறது.

அதேபோல் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங்கும் ஆரம்பித்துவிட்டது. தற்போது இப்படத்தையும் 1 மாதத்தில் முடித்து விடுவேன் என வெற்றிமாறன் கூறியிருக்கிறார். ஆனால் வாடிவாசல் திரைப்படம் பெரிய அளவில் செட் போட்டு படபிடிப்பு நடப்பதால் உருவாவதால் எப்படியும் நான்கைந்து மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் தற்போது வெற்றிமாறன் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை என கூறிவருகின்றனர். மேலும் முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு படம் தான் இயக்குவார். அதே போல இப்போதும் வருடத்திற்கு ஒரு படம் இயக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் விஜய் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் பேச்சி கிளம்பியதும் ஆரம்பித்தது பிரச்சனை.

தற்போது தயாரிப்பாளர்கள் வெற்றிமாறனுக்கு நெருக்கடி கொடுப்பதால் இந்த 2 படங்களையும் முடித்த பிறகு விஜய்யுடன் அடுத்த படத்தில் இணைவார் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

40 வருட சினிமா வாழ்க்கையை கேவலப்படுத்தி விட்டனர்.. புலம்பும் ஆர்த்தியின் கணவர்

கணேஷ்கர் சனிக்கிழமை இரவு பட்டினப்பாக்கம் சாலையில் காரில் சென்று கொண்டிருக்கும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பின்னாலிருந்து வந்த நபர் காயமடைந்துள்ளார். ...
AllEscort