தமிழ் சினிமா இழந்த 6 வில்லன் நடிகர்கள்.. மறக்க முடியாத நாயகன் பட வாபா

ஹீரோவை ரசிகர்கள் பிடிப்பதற்கு முக்கிய காரணம் அப்படத்தில் நடிக்கும் வில்லன் தான். இவர்களால்தான் ஹீரோக்களை ஆக்ஷன் ஹீரோவாக காட்டுகிறார்கள். தமிழ் சினிமா சிறந்த வில்லன் நடிகர்களை இழந்துள்ளது. அவ்வாறு நம் மனதிலிருக்கும் 6 வில்லன் கதாபாத்திரங்களை பார்ப்போம்.

திலகன் : விஜயகாந்த் நடிப்பில் வெளியான சத்ரியன் படத்தில் அருமைநாயகம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் திலகன். இதைத்தொடர்ந்து கார்த்திக்கின் மேட்டுக்குடி, அஜித்தின் வில்லன் போன்ற படங்களில் திலகன் நடித்திருந்தார். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கலாபவன் மணி : தமிழ், தெலுங்கு படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் கலாபவன் மணி. இவர் விக்ரமின் ஜெமினி படத்தில் தேஜா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து புதியகீதை, போஸ், அந்நியன், வேல், பாபநாசம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சிறுநீர் பிரச்சினை கோளாறு காரணமாக உயிரிழந்தார்.

பிரபாகர் : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிப் படங்களில் முன்னணி நடிகராக விளங்கியவர் டைகர் பிரபாகர். இவர் ரஜினியின் அண்ணாமலை படத்தில் டானாக நடித்திருந்தார். இவர் சில படங்களில் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

ராமி ரெட்டி : இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் ராமி ரெட்டி. இவர் அம்மன் படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தார். இவர் விஜய்யின் நெஞ்சினிலே படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவருக்கு சிறந்த வில்லனுக்கான நந்தி விருதும் கிடைத்துள்ளது. ராமி ரெட்டி கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறால் கடந்த 2011 ஏப்ரல் 14ஆம் தேதி உயிரிழந்தார்.

பிரிதீப் சக்தி : கமலஹாசனின் நாயகன், ரஜினிகாந்தின் தளபதி படங்களில் வில்லனாக நடித்தவர் பிரதீப் சக்தி. இதுதவிர மருதுபாண்டி, மைக்கேல் மதன காமராஜன், பிரம்மா போன்ற படங்களில் பிரதீப் நடித்துள்ளார். இவர் கலியுக விஸ்வாமித்ரா என்ற படத்தையும் இயக்கி இருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார்.

ராஜன் பி தேவ் : சூரியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ராஜன் பி தேவ். இவர் இதைத்தொடர்ந்து ஜென்டில்மேன், லவ் டுடே, பூமகள் ஊர்வலம், தாலி காத்த காளியம்மன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலான படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு கொச்சியில் ஈரல் பாதிக்கப்பட்டு காலமானார்.