தமிழ் சினிமாவை அதிரவைத்த சிவாஜியின் 7 படங்கள்.. வரலாற்று கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர்

தமிழ் சினிமாவின் வரலாற்றில் நடிகர் சிவாஜி கணேசனை தவிர்த்து விட்டு சொல்ல எதுவும் இல்லை. இவர் நடிப்பு, வசன உச்சரிப்பு, முகபாவனை அனைத்தும் எப்பொழுதுமே தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும். மேலும் இவர் நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

சக நடிகர்களுக்கெல்லாம் நடிப்பில் ஒரு பல்கலைக்கழகமாக இருந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர்.

அதன்பிறகு இவர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் இவருடைய நடிப்பு கதைக்கு உயிரோட்டமாக இருந்து வந்தது. அதிலும் வரலாற்று கதாபாத்திரங்களான வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன் போன்ற திரைப்படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்.

இது தவிர பராசக்தி, நவராத்திரி, பாசமலர், தில்லானா மோகனாம்பாள் போன்ற திரைப்படங்களிலும் தனது உணர்ச்சிப் பூர்வமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியர், தாதா சாகிப் பால்கே போன்ற பல விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர்.

இத்தனை சாதனைகளையும் பெருமையும் படைத்த நடிகர் திலகம் 2001-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மரணம் அடைந்தார். இவரை கௌரவப்படுத்தும் விதமாக தமிழக அரசு சென்னை மெரினா கடற்கரையில் இவருடைய சிலையை 2011-ஆம் ஆண்டு நிறுவியது.

கடந்த 1, அக்டோபர்-2021 அன்று கூகுள் நிறுவனம் முகப்புப் பக்கத்தில் டூடுள் போட்டு இவரை கவுரவித்தது. கூகுளின் தேடல் பக்கத்தில் இவரது பெயரை போட்டாலே இவர் நடித்த படங்கள் வரிசைகட்டும். தமிழ் சினிமாவில் இன்னும் எத்தனை நடிகர்கள் வந்தாலும் நடிப்புக்கான விதை இவர் போட்டது.

பைத்தியம் போல் உளறினேன்.. தியா மேனனின் பரிதாபத்திற்குரிய நிலமை!

10 வயதில் மலையாள சேனல்களில் தொகுப்பாளினியாக அறிமுகமான தியா மேனன், அதன்பிறகு முன்னணி தொலைக்காட்சிகளான சன் டிவியிலும், சன் மியூசிக்கிலும் பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றார். பிறகு தியா சிங்கப்பூரை ...