தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு உள்ள ரசிகர் போல அதே அளவு கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்கள் உள்ளார்கள். பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார். அவர்கள் நடித்த திரைப்படங்களை பார்க்கலாம்.

சடகோபன் ரமேஷ்: தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ். தற்போது கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்பட்ட சாந்தி இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். தமிழ் சினிமாவில் சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அண்ணனாக சஞ்சய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு யுவராஜ் தயாளன் இயக்கத்தில் 2011இல் வெளியான போட்டா போட்டி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரராக சடகோபன் ரமேஷ் நடித்திருந்தார். அவருடன் இணைந்து ஹரிணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வருண் சக்ரவர்த்தி: ஐபிஎல் போட்டியில் கலக்கி வந்த வீரர்களில் ஒருவர் வருண் சக்ரவர்த்தி. தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண்சக்ரவர்த்தி நடிகர் விஜயின் மிகப்பெரிய ரசிகர் ஆவார். அதை வெளிக்காட்டும் வகையில் அவருடைய கையில் தலைவா படத்தின் லோகோவை பச்சை குத்தியுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஜீவா திரைப்படத்தில் நடிகர் ஜீவாவின் பயிற்சி பெறும் குழுவில் சக கிரிக்கெட் வீரராக சில காட்சிகளில் வருண் சக்கரவர்த்தி நடித்துள்ளார்.

பிரவோ: வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆனா கிரிக்கெட் வீரர் பிரவோ. ராஜன் மாதவ் இயக்கத்தில் 2019 இல் வெளியான திரைப்படம் சித்திரம் பேசுதடி 2. இப்படத்தில் விதார்த், காயத்ரி, அஜ்மல் அமீர், நிவேதிதா என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் என்னடா பாடலுக்கு பிரவோ நடனமாடியுள்ளார். இப்படத்திற்கு சாஜன் மாதவ் இசையமைத்துள்ளார்.

ஹர்பஜன் சிங்: இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங். இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். தமிழர்களின் முக்கிய பண்டிகைகளின் போது தமிழில் டிவிட் செய்வார். ஹர்பஜன்சிங் பிளாக் ஷீப் என்ற யூடியூப் சேனலில் திருவள்ளுவர் வேடத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 2021ல் வெளியான பிரண்ட்ஷிப் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் லாஸ்லியா ஹர்பஜன்சிங்டன் இணைந்து நடித்திருந்தார். இத்திரைப்படம் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்து வெளியானது. அதன்பின் சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார்.

இர்பான் பதான்:
கிரிக்கெட் போட்டிகளில் ஆல்ரவுண்டர் வீரராக வலம் வந்தவர் தான் இர்பான் பதான். டிமான்டிக் காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி வெளியாக உள்ள திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இர்பான் பதான் நடித்துள்ளார். கோப்ரா படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.