தமிழ் சினிமாவின் அவலநிலை.. காப்பாற்றும் இடத்தில் இருக்கும் ரஜினி, விஜய், அஜித்

தமிழ் சினிமா தற்போது அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. அதாவது இங்கு உள்ளவர்களை தவிர வேறு மாநிலத்தவர்கள் தமிழ் சினிமாவிற்கு வந்த சம்பாதித்துள்ளனர். மேலும். சம்பாதித்தும் வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க தமிழ் படங்களை காட்டிலும் வேறு மாநில நடிகர்களின் படங்கள் இங்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

அதாவது பாகுபலி, கே ஜி எஃப் போன்ற வேற்று மொழியில் எடுக்கப்பட்ட படங்கள் இங்கு சக்கைபோடு போட்டு வருகிறது. மேலும், வசூலிலும் நல்ல லாபத்தை அள்ளிபோகிறது. இதனால் இங்குள்ள நடிகர்களும் வேறு மாநிலத்தில் சென்று படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார்கள்.

இவ்வாறு நடப்பதால் இதில் பெரிதும் பாதிக்கப்படுவது இங்குள்ள சினிமா தொழிலாளர்கள் தான். இதனால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் என எல்லோரும் நன்றாக சம்பாதித்தாலும் தமிழ் சினிமா தொழிலாளர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். மேலும் பல பெரிய ஹீரோக்கள் தங்களது படப்பிடிப்புகளை வெளிநாட்டிலேயே வைத்துள்ளனர்.

இதனால் இங்கு உள்ள தொழிலாளர்களின் வேலை பறிபோகிறது. மேலும் அவர்களது வாழ்வாதாரமும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் அந்த தொழிலாளர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் இதற்கு உரிய நடவடிக்கை இன்னும் எடுத்ததாக தெரியவில்லை.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் இதற்கான நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக விஜய் இது போன்ற நல்ல விஷயங்களை தற்போது செய்து வருகிறார். அதாவது விஜய்யின் 66 ஆவது படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தான் நடத்த வேண்டும் என விஜய் படக்குழுவிடம் கூறியுள்ளார். ஏனென்றால் இங்கு படப்பிடிப்பு நடத்த பல தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என இவ்வாறு விஜய் செய்துள்ளார். இதுபோன்ற பெரிய நடிகர்களும் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டால் இங்குள்ள தொழிலாளர்கள் வாழ்வு பெறுவார்கள்.