தமிழில் உருவான முதல் பேய் படம்.. இப்ப பாத்தா கூட பயம் வரும்!

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகளில் படங்கள் வெளியாகியுள்ளன. ஒரு காலத்தில் சண்டை காட்சிகள் மட்டுமே மையமாக வைத்து ஏராளமான படங்கள் வெளியாகி வந்தன. அதன் பிறகு தொடர்ந்து பல இயக்குனர்களும் சண்டைக் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை பெரிய அளவில் வெற்றியடையச் செய்தனர்.

சினிமாவை பொருத்தவரை எது பரவலாக பேசப்படுகிறதோ அதனை மையமாக வைத்தே படங்களை இயக்குவார்கள். அதன்பிறகு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகின. ஒரு கட்டத்திற்கு பிறகு அனைத்து இயக்குனர்களும் காமெடியை மையமாக வைத்து படங்களை இயக்கி வெற்றி கொடுத்து வந்தனர்.

பின்பு அது ரசிகர்களுக்கு சலித்து போக அதன் பிறகு வேறு வித்யாசமான கதைகளில் படங்களை எடுக்க முடிவு செய்தனர். இருப்பினும் இயக்குனர்களுக்கு பெரிய அளவில் மாற்றங்கள் கொடுக்க முடியவில்லை அதன்பிறகு பேய் மையமாக வைத்து பல படங்கள் இயக்கி வந்தனர். அது ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஒரு கட்டத்திற்கு பிறகு அனைத்து இயக்குனர்களும் பேயை வைத்து தான் படங்களை இயக்கிய வந்தனர்.

உதாரணமாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு முனி, காஞ்சனா என தொடர்ந்து அடுத்தடுத்து பாகங்கள் வெளியாகி மீண்டும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனை பார்த்த சுந்தர் சி உடனே அரண்மனை எனும் பேய் படத்தை எடுத்திருந்தார். இப்படமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அதன்பிறகு அனைத்து இயக்குனர்களும் பேயை மட்டுமே மையமாக வைத்து படங்களை இயக்கினர். ஆனால் தமிழ் சினிமாவில் முதல் முதலில் பேயை மையமாக வைத்து வெளியான திரைப்படம் மர்மயோகி. பின்பு இப்படத்திற்கு யு ஏ சர்டிபிகேட்டும் கொடுக்கப்பட்டது. அதன்பிறகுதான் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பேய் படங்கள் வெளியாகின. இன்றுவரை பேய் படம் வெளியாவதற்கு காரணம் ரசிகர்களின் ஆதரவுதான் என பலரும் கூறி வருகின்றனர்.