தமிழில் இந்த நடிகருடன்தான் நடிப்பேன்.. தலைவி பட பிரஸ் மீட்டில் சொன்ன கங்கனா ரனாவத்

தலைவி திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் கங்கனா ரணாவத் ஒரு பேட்டியில் விஜய் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.

கங்கனா அமர்தீப் ரனாவத் என்ற கங்கனா ரனாவத் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தார். எலைட் மாடலிங் ஏஜென்சி சேர்ந்த பிரபல மாடலாக இருந்து வந்தார்.

அதன்பிறகு அவருக்கு பாலிவுட்டில் திரைப்பட வாய்ப்புகள் வந்தது. கேங்ஸ்டார் என்னும் திரைப்படத்தின் மூலமாக சினிமா துறையில் அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே பிலிம்பேர் விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றார்.

அதைத் தொடர்ந்து தமிழில் இயக்குனர் ஜீவா இயக்கத்தில் தாம் தூம் திரைப்படத்தில் நடித்தார். நடிப்பு மட்டுமின்றி எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான இருந்து வருகிறார்.

35 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் கங்கனா ரணாவத் தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தலைவி என்ற படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருக்கிறார்.

கங்கனா ரனாவத் இடம் ஒரு பேட்டியில் எந்த உச்ச நடிகருடன் நடிக்க ஆசை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு விஜய் மற்றும் ரஜினி யுடன் நடிப்பதற்கு ஆசை என்று கூறியிருக்கிறார் .மேலும் விஜய் அல்டிமேட் ஹீரோவாக இருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். இது தளபதி விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.