தன் பாணியில் ரஜினியை லாக் செய்த நெல்சன்.. கதைனா இப்படி இருக்கணும்!

நேற்று அதிகாரப்பூர்வமாக வெளிவந்த ரஜினியின் அடுத்தப்பட அறிவிப்பில் ரசிகர்கள் திக்குமுக்காடி இருக்கின்றார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் கூட்டணியில் உருவாகவிருக்கும் ரஜினி169 சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பிரம்மாண்ட படமாகும்.

இந்த கூட்டணியை பார்த்தால் அனைவரும் சற்று வியப்பாகவே இருக்கிறது. காரணம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பல வெற்றி இயக்குனர்கள் கதை சொல்லியும், அடுத்த கதைக்கு அவர் நெல்சன் தேர்ந்தெடுத்தது தான்.

நெல்சன் ரஜினியை எப்படி கவர்ந்தார் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ரஜினி இப்பொழுது எதிர்பார்க்கும் கதைக்களம் வித்தியாசமான ஒன்று. அதை நெல்சன் எப்படி பூர்த்தி செய்ய போகிறார்கள் என்பதில் பெரிய வியப்பு நிலவுகிறது.

இப்பொழுது ரஜினி எதிர் பார்க்கும் ஒரு சப்ஜெக்ட் பாட்ஷா, தளபதி போன்ற ஒரு கேங்ஸ்டர் மூவி. அதை அவரே வெளிப்படையாக கூறியிருந்தார். அதனால் தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகவிருக்கும் படம் கிட்டத்தட்ட ஒரு கேங்ஸ்டர் படம் என்பது முடிவாகியுள்ளது.

நெல்சன் எப்படி ரஜினிக்கு ஏற்ப கேங்க்ஸ்டர் படம் கொடுப்பார் என்பது தான் இப்பொழுது கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது. படத்தில் அனிருத் வேறு இருக்கிறார், இந்த மாதிரி படத்திற்கு அவரின் இசைதான் தூக்கலாக இருக்கும். அதனால் அனிருத்தை அமைத்ததும் ஒரு சிறப்பம்சம்.

எது எப்படியோ பழைய பாட்ஷா, தளபதி கேங்ஸ்டர் சாயலில் அடுத்து ரஜினியை பார்க்க ஆவலாக இருக்கிறார்கள் ரசிகர்கள். அடுத்து சன் பிக்சர்ஸ் கையில் எடுத்த இந்த திரைப்படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.