தன் படத்தில் 2 இயக்குனர்களை நடிக்க வைத்த சிவகார்த்திகேயன்.. சிறப்பு தோற்றத்தில் கலக்கும் ஸ்டைலிஷ் பிரபலம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல இயக்குனர்களும் சிவகார்த்திகேயனை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் தற்போது கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனின் பாடல் காட்சிகள் தாஜ்மஹாலில் படமாக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் தற்போது டப்பிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் எஸ் ஜே சூர்யா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் இதில் வில்லனாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா வரும் காட்சிகள் அனைத்திலும் கலக்கி இருக்கிறார் என கூறி வருகின்றனர்.

இப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் கௌதம் மேனனிடம் சிறப்பு தோற்றத்தில் நடிக்குமாறு கேட்டதால் தான் நடித்ததாக கூறிவருகின்றனர்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கூடிய விரைவில் முடிக்கப்பட்டு அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் விரைவில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் இப்படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் எனவும் நகைச்சுவை கலந்து கதாபாத்திரங்களை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள் ஸ்பெஷல் – மறக்கமுடியாத கார்த்திக்கின் 5 படங்கள்.. மனுஷன் ஒன்னு ஒன்னும் வேற ரகம்

நடிகர் சிவகுமாரின் இளைய வாரிசான கார்த்தி தற்போது சினிமாவை பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அமெரிக்காவில் தனது படிப்பை முடித்துவிட்டு பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்நிலையில் தற்போது விருமன், சர்தார், பொன்னியின் ...