தனுஷ் பட இயக்குனருடன் இணைந்த குக் வித் கோமாளி அஸ்வின்.. எந்த காட்டுல அலையவிட போறாரோ

என்னதான் சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை விட்டுக்கொடுத்தாலும் ரியாலிட்டி ஷோக்களை பொறுத்தவரை ராஜாவாக வலம் வருகிறது விஜய் டிவி.

சிவகார்த்திகேயன், சந்தானம், நவீன், கோபிநாத் ,மாகாபா ஆனந்த் என விஜய் டிவியிலிருந்து திரையில் தடம் பதித்தவர்கள் பலர் இப்போது காமெடியில் கலக்கும் யோகிபாபுவும் கூட விஜய் டிவியின் லொள்ளு சபாவில் இருந்தவர் தான்.

இப்படியாக விஜய் டிவியின் பிரபலங்கள் இருக்க திரைத்துறையில் அடுத்ததாய் கால் தடம் பதிக்கவிருக்கிறார் குக் வித் கோமாளி அஷ்வின்.

ஏற்கனவே ஆதித்யா வர்மா மற்றும் ஓ காதல் கண்மனி படங்களில் துணை பாத்திரமாக அறிமுகமானவர். சமீபத்தில் குக் வித் கோமாளி ஷோவின் வாயிலாய் அனைத்து இல்லங்களுக்கும் அறியும் முகமாய் மாறிப்போனார்.

என்ன சொல்ப்போகிறாயன என்ற படத்தின் வாயிலாய் நாயகனாக அறிமுகமாகிறார் அஷ்வின். அப்படத்தின் வெளீயீடுக்கு தயாராக வரும் நிலையில் அடுத்த படம் குறித்த அப்டேட் அஷ்வின் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

மைனா, தொடரி, கயல், கும்கி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பிரபுசாலமனின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் அஷ்வின்.