தனுஷ் பட இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா.? எலான் மஸ்க்கிடம் கெஞ்சிய சம்பவம்

தமிழ் சினிமாவில் ஒரு இளம் இயக்குனராக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் கார்த்திக் நரேன். துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தன் பயணத்தை ஆரம்பித்த இவர் நரகாசுரன், மாபியா போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதில் மாபியா திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது.

இதையடுத்து அவர் இயக்கிய அக்னி என்ற குறும்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அரவிந்த்சாமி, பிரசன்னா நடிப்பில் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்று இயக்குனருக்கு ஒரு நல்ல பெயரைத் தேடிக் கொடுத்தது.

இப்படி ஒரு வெற்றி இயக்குனராக வலம் வந்த இவருக்கு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் திரைப்படம் ஒரு தோல்விப் படமாக அமைந்தது. இதனால் அவர் பல விமர்சனங்களை சந்தித்தார். தற்போது அதையெல்லாம் தாண்டி இவர் நிறங்கள் 3 என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் அதர்வா, சரத்குமார், ரகுமான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்திக் நரேன் தற்போது ட்விட்டர் தளத்தை வாங்கியிருக்கும் எலான் மஸ்க்கிற்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, யோவ் எலான் மஸ்க் நீ மார்சுக்கு போவதற்கு முன் அப்படியே நரகாசுரன் படத்தையும் வாங்கி ரிலீஸ் பண்ணினா உனக்கு புண்ணியமா போகும் என்று கேட்டுள்ளார்.

ஏனென்றால் கார்த்திக் நரேன் இயக்கிய இந்த நரகாசுரன் திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராக இருந்தது. அரவிந்த்சாமி, ஸ்ரேயா சரண், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் பொருளாதார பிரச்சினையின் காரணமாக அப்படியே கிடப்பில் கிடக்கிறது.

மேலும் படத்தை வெளியிட பல முயற்சிகள் மேற்கொண்டும் படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. அதைப் பற்றிதான் கார்த்திக் நரேன் தற்போது காமெடியாக குறிப்பிட்டுள்ளார். அவர் போட்ட அந்த பதிவு தற்போது ஏகப்பட்ட லைக்குகளையும், கமெண்ட்களையும் குவித்து வருகிறது.