தமிழ் சினிமாவில் நடிகர் கதிர் மற்றும் கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே ஒரு சிறந்த இயக்குனராக தன்னை நிரூபித்துக் காட்டிய மாரிசெல்வராஜுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக மாரி செல்வராஜ் இடம் பிடித்தார்.

இதனைத்தொடர்ந்து அவரது இயக்கத்தில் இரண்டாவது படமாக முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படம் வெளியானது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தனுஷுடன் இணைந்து ராஜிஷா விஜயன், யோகி பாபு, லால், கெளரி, பூ ராம், உள்ளிட்ட பலர் கர்ணன் படத்தில் நடித்திருந்தனர்.

மேலும் கர்ணன் படத்தை முன்னணி தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தேனீ ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். கர்ணன் படம் விமர்சனரீதியாக மட்டுமின்றி வசூல்ரீதியாவும் சாதனை படைத்தது. பலரும் படத்தை தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

மேலும் சர்வதேச அளவிலும் கர்ணன் படத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். படம் வெளியான சமயத்திலேயே படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை அடிபட்டது. அதேபோல் ரசிகர்களும் இரண்டாம் பாகம் வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்கள். ஆனால் தற்போது வரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கர்ணன் படத்தின் இரண்டாம் பாகம் மேக்கிங் வீடியோ என குறிப்பிட்டுள்ளார். இதனால் கர்ணன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதியாகியுள்ளது. தயாரிப்பாளரே அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.