தனுஷ் – ஐஸ்வர்யா வாழ்க்கையை தெரிந்தே கெடுத்த அப்பா.. வைரலாகும் ரஜினியின் உளறல்

சமீபத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறிய ஒரு விவாகரத்து விவகாரம் என்றால் அது தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து தான். விவாகரத்து பற்றி அறிவித்தவுடன் அது குறித்து பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. விவாகரத்து குறித்த காரணங்கள் சரியாக சொல்லப்படவில்லை என்றாலும், இருவரும் விருப்பத்தோடுதான் பிரிகிறோம் என்று அவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இந்த பதிவை சமூகவலைதளத்தில் பதிவிட்டதிலிருந்து பலரும் எதற்காக இந்த விவாகரத்து என்ன பிரச்சனை அவர்களுக்குள் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இருந்தாலும் அதற்குரிய சரியான காரணம் எதுவும் அவர்கள் தரப்பில் இருந்து வரவில்லை. அவர்கள் கடந்த 18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து விட்டோம். என்னைப் பற்றி அவரும் அவரைப் பற்றி நானும் புரிந்து கொள்வதற்கு எங்களுக்கு இந்த பிரிவு தேவையான ஒன்றாக இருக்கிறது என்று இருவரும் கூட்டாக அறிவித்திருந்தனர்.

இருந்தாலும் இவர்கள் விவாகரத்து குறித்தான பிரச்சனைகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு மத்தியில் இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகும் சமயத்தில் ரஜினிகாந்த் அவர்கள் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் ரஜினிகாந்த் அவர்கள் தனுசுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் செய்து வைத்தது நான்தான். ஆனால் எனக்கு அதில் இருக்கக்கூடிய விருப்பத்தின் அளவைவிட ஊடகங்கள் ஆகிய நீங்கள் காட்டிய ஆர்வம் தான் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்திருக்கிறது என்று சூப்பர் ஸ்டார் கூறினார்.

தனுஷை விட ஐஸ்வர்யா வயதில் மூத்தவர் என்பதால் தனுஷ் வீட்டிலும் சரி ஐஸ்வர்யாவின் வீட்டிலும் சரி, திருமணத்திற்கு பிறகு பிரச்சனை ஏதேனும் வரும் என்று இரு குடும்பத்தாரும் இது சரி வராது என்று நினைத்தனர். ஆனால் இறுதியாக ஐஸ்வர்யா தனுஷின் மீது வைத்திருந்த தீராத காதல் தான் அவர்கள் இருவரையும் திருமணம் வரை செல்ல வைத்துவிட்டது. அதனால்தான் நானும் வேறு வழியில்லாமல் ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் திருமணம் செய்து வைத்தேன் என்று ரஜினிகாந்த் அப்போது கூறி இருந்தார்.

அவர் ஐஸ்வர்யா தனுஷின் திருமணத்திற்குப் பிறகு அளித்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதை அனைத்தையும் கூறியிருந்தார். அப்படி ஏற்கனவே பிரச்சனை வரும் என்று தெரிந்து இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில் அவர்கள் நினைத்தப்படியே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

ரஜினிகாந்தின் இரண்டு மகள்களுக்கும் இதுபோன்ற விவாகரத்து குடும்ப பிரச்சனை என்று பல விஷயங்கள் ரஜினியை போட்டு வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. அவரின் நெருக்கமானவர்களிடம் ரஜினிகாந்த் இதைப் பற்றி பலமுறை புலம்பியதாகவும் சொல்லப்பட்டது. இப்படி இருக்கின்ற நேரத்தில் ரஜினிகாந்த் அவர்கள் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது பரவி வருகிறது . அதான் அப்போதே தெரிந்து இருக்கிறதே அப்புறம் ஏன் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தீர்கள் என்று நெட்டிசன்கள் ஒருபுறம் கேள்விகளை தொடுத்து வருகின்றனர்.