தனுஷ் என்னை காதலித்தார்.. பேட்டியில் பெருமையாக சொன்ன பிரபல நடிகை

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு நடிகராக இருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக இந்திய சினிமாவை திரும்பி பார்க்கும் அளவிற்கு வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி ஹாலிவுட்டில் தி கிரே மேன் திரைப்படத்திலும் தனுஷ் நடிப்பதற்காக ஆயத்தமாகி வருகிறார்.

ஆனால் திரைத்துறையில் வெற்றி பெற்று வரும் தனுஷ் சமீபத்தில் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன் பிறகு தனுஷ் பற்றிய பலவிதமான சர்ச்சைகள் வரத்தொடங்கின.இந்த நிலையில் தனுஷ் தன்னை காதலித்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் கூறிய தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள மோகன்தாஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் வேளையில் தற்போது பல பேட்டிகளில் பங்கேற்று வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இந்த நிலையில் வடசென்னை படத்தில் தனுஷுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்தது.

இப்படத்தில் இடம்பெற்ற பத்மா கதாபாத்திரம் தன் திரை வாழ்க்கையை புரட்டிப் போட்ட கதாபாத்திரம் என்று தெரிவித்த அவர் அந்த கேரக்டரில் தத்ரூபமாக நடிக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் தனுஷை உண்மையாகவே என்னை காதலிக்க வைத்தார் என்று தெரிவித்துள்ளார்.

தனுஷ் உண்மையாகவே தன்னை காதலித்து நடித்ததால் தான் எங்களுக்குள் இருந்த கெமிஸ்ட்ரி இன்னும் அதிகமாக காட்டப்பட்டது. மேலும் தனுஷ் மிகவும் அற்புதமான மனிதர் என்றும் இந்த படத்தில் டப்பிங் செய்யும் போதே என்னை விட நீதான் நன்றாக நடித்து இருக்கிறாய் என்று தனுஷ் தன்னை பாராட்டியதாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தற்போது வட சென்னை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் கூடிய விரைவில் இத்திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இடம் பொருள் ஏவல், தி கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.