நீண்ட நாட்களாக வீட்டில் இருந்த செல்வராகவன் தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கவுள்ளார். சமீபத்தில் கூட இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. ஆனால் செல்வராகவன் தனுஷ் இணைவதற்கு முன்பு இவர்கள் இருவருக்குள்ளும் பல்வேறு விதமான முட்டல்களும், மோதல்களும் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின.

அதாவது தனுஷ் தற்போது பல இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். தனது தம்பி என்பதால் செல்வராகவன் தனது படத்தில் நடிக்குமாறு முதலில் கூறியுள்ளார். ஆனால் தனுஷ் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு அதிக கவனம் செலுத்தியதால் செல்வராகவன் மறைமுகமாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனிமையாக இருக்கிறேன், யாரும் துணை இல்லை என நாசுக்காக கூறிவந்தார்.

இதனை கண்டறிந்த ரசிகர்கள் செல்வராகவனுக்கும் தனுஷுக்கும் இடையே மோதல்கள் இருப்பதாக கூறி வந்தனர். ஆனால் செல்வராகவன் இதை பற்றி எதையும் வெளிப்படையாக கூறவில்லை. தற்போது நானே வருவேன் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர். படப்பிடிப்பிற்கான வேலைகளில் தற்போது செல்வராகவன் ஈடுபட்டு வருகிறார்.

தனுசுக்கு ஜோடியாக தற்போது பிகில் படத்தில் நடித்த இந்துஜா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் படக்குழுவினர் இன்னும் ஒரு சில நாட்களில் படத்தினைப் பற்றிய அப்டேட்களை வெளியிடுவதாக கூறியுள்ளனர்.

சமீபத்தில் நானே வருவேன் படத்தின் போஸ்டர் வெளியானது பார்க்கும் போது தனுஷ் வேட்டைக்காரனாக நடிப்பதாக தெரிகிறது. அதாவது காட்டில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இப்படம் உருவாகிறது. காட்டில் இருக்கும் இளைஞனாக தனுஷ் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பிகில் படத்தில் நல்ல பெயரை வாங்கிய இந்துஜா தற்போது இந்த படத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினால் கண்டிப்பாக சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை நிலை நிறுத்தி விடலாம். புடிச்சாலும் புலியம் கொம்பாக பிடித்துள்ளார் இந்துஜா.