தனுஷால் கண்கலங்கிய அம்மா.. இதையெல்லாம் என்னால பார்க்கவே முடியல

தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அறிவிப்பு வெளியானதிலிருந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த தனுஷ் படங்கள் ஏராளம். குறிப்பாக காதல் கொண்டேன், 3 மற்றும் அசுரன் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதிலும் குறிப்பாக இவர் இறக்கும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தான் கூற வேண்டும்.

 சமீபத்தில்  தனுஷ் அம்மாவிடம் தனுஷை பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பல பதில்கள் கூறினார். அதிலும் குறிப்பாக தனுஷ் படங்கள் பற்றி கேட்டதற்கு தனுஷ் படங்கள் எனக்கு பிடிக்கும் ஆனால் அதில் ஒரு சில காட்சிகள் எனக்கு பிடிக்காது என தெரிவித்திருந்தார்.

இன்றுவரை காதல் கொண்டேன் திரைப்படத்தின் இறுதிக் காட்சியை பார்க்கவே இல்லை என கூறினார். அதேபோல் 3 திரைப்படத்தில் தன்னை தானே கொன்று கொள்வார். அந்த காட்சியை பார்த்த தில்லை. மேலும் அசுரன் படத்தில் இவர் நடித்த ஒரு சில காட்சிகள் இன்றுவரை நான் பார்த்ததே இல்லை. தனுஷ் நடிப்பை பார்ப்பேன் ஒரு சில காட்சிகள் மட்டும் தவிர்த்து விடுவேன் என கூறினார்.

மேலும் தனுஷ் நடிப்பின் மூலம் பல படங்கள் வெற்றி கண்டுள்ளார் எனவும் அவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே தனக்குப் பிடித்தவை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தனுஷ் நடிக்கும்  படங்கள் கூட பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் என கூறியுள்ளார்.