
தமிழ் சினிமாவில் எத்தனையோ அறிமுக நாயகிகள் வருவதும் போவதுமுண்டு அந்த வகையில் அருண் விஜய் நடித்த தடம் என்கிற படத்தில் தமிழில் அறிமுகம் கண்டவர் பிரபல நடிகை தன்யா ஹோப்.
இவர் ஒரு மாடலிங் அழகியுமாவார் கொல்கத்தாவில் நடந்த அழகிப்போட்டியிலும் கலந்துகொண்டு பட்டம் வென்ற தான்யா மாடலிங்கில் இருந்து நடிப்பில் குதித்தார். அப்போட்லு ஒக்கடுந்தேவுடு என்ற தெலுங்கு படத்தின் வாயிலாய் தென்னக சினிமாவில் இடம் கிடைக்க அதனை சரியாக பயன்படுத்தினார் தான்யா.
தொடர்ந்து நேனு சைலஜா, பேப்பர் பாய், படேல் S.I.R படங்களில் நடித்தவருக்கு தமிழ் சினிமாவில் முதல் ஹிட் கொடுத்தது தடம் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் ஹரீஸ் கல்யானுடன் தாராள பிரபு அடுத்து குலசாமி என்கி பெயரில் ஒரு படமும் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு பெயரிடப்படாத படமும் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் கொரனா ஊரடங்கு காரணமாய் பல்வேறு பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். அதே போல நடிகை தன்யாவும் ஒரு மாதத்திற்கு ஒரு கிராமம் என அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தருவதோடு உணவளிக்கவும் செய்கிறார்.
இத்திட்டத்தின் மூலம் சராசரியாக 200 நபர்கள் பயன்பெறும்படி செய்கிறார் தன்யா. கவர்ச்சியில் தாராளம் காட்டும் அம்மணி சேவையிலும் தாராளம் காட்டுவது பிரபலங்கள் பலரிடம் வரவேற்பை பெற்றுள்ளது . மேலும் ஷைன் சில்ட்ரன் ஹோம் என்ற காப்பகத்திற்கும் தன்னால் முடிந்த உதவிகளைை செய்து வருகிறார் தன்யா. மனமார்ந்த வாழ்த்துக்களுடன் வயிராற சாப்பிட்டு செல்கிறார்கள் பயன் பெறும் மக்கள்.