தங்கச்சி சென்டிமெண்டில் மாட்டிய ரஜினி.. அண்ணாத்த கை கொடுக்குமா? காலை வாருமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் அண்ணாத்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் பொதுவான ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதை மறுத்து ஒதுக்கிவிட முடியாது. இதுவே படத்திற்கு பெரிய நெகட்டிவ் இமேஜ் வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மீனா குஷ்பு ஆகியோர் மீண்டும் நடிக்க வந்ததால் அண்ணாத்தா படம் ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் என்பது மட்டும் உறுதி. ஆனால் தேவையில்லாமல் தங்கச்சி சென்டிமென்ட் தான் படத்தை கெடுத்து விடுமோ என்பது ரசிகர்களின் வேதனையாக உள்ளது. ரஜினிக்கு தங்கச்சி கீர்த்தி சுரேஷ் மகளாக நடிக்க வேண்டியவர் தங்கச்சியாக நடித்ததால் வந்த விமர்சனம் தான் இது.

பொதுவாகவே ஒரு வயதை தாண்டிவிட்டால் நடிகர்கள் அந்தந்த வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை செய்து தங்களுடைய மார்க்கெட்டை நிலையாக வைத்துக் கொள்வார்கள். இதுதான் சினிமாவின் அடிப்படை. ஆனால் மாஸ் ஹீரோக்களுக்கு மட்டும் தாத்தா வயது ஆனாலும் ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்வது பில்டிங் பில்டிங் தாண்டி சண்டை போடுவது என நம்பமுடியாத சினிமாவை காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ரஜினிகாந்த் கடைசியாக நடித்த கபாலி, காலா போன்ற படத்தில் அவருடைய வயதுக்கேற்ற கதாபாத்திரமாக இருந்ததால் அந்த படங்கள் சுமாராக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வசூலை வாரி குவித்தது என்பதை மறந்து விடக்கூடாது. அதேபோலத்தான் ரஜினி மற்றும் சிறுத்தை சிவா இணைந்த அண்ணாத்த படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் டிரைலர் வந்த பிறகு தான் தெரிகிறது கதையே வேறு.

ஏற்கனவே நயன்தாராவுடன் ரஜினி ரொமான்ஸ் பாடலில் நடித்ததே படத்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் ரஜினிக்கு தங்கச்சியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளது இன்னமும் படத்தின் மீதான நம்பிக்கையை குலைத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது இருவருக்கும் செட் ஆகவில்லை என்று. எப்படியும் திருவிழா காலம் என்பதால் முதல் மூன்று நாட்களிலேயே போட்ட முதலை எடுத்துவிடுவார்கள்.