ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. காடர்களும் வேடர்களும் இணைந்த டாஸ்க்! வெற்றி பெறப்போவது யார்?

ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் சர்வைவர். இந்நிகழ்ச்சியில் வாரத்தின் இறுதியில் இம்யூனிட்டி டாஸ்க் எப்பொழுதும் நடத்துவர். இதில் வெற்றி பெறும் அணி சேவ் ஆகும். தோற்கும் அணி ட்ரைபல் பஞ்சாயத்தில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அர்ஜூனை சந்திக்க வேண்டும்.

பிறகு வாக்கெடுப்பின் மூலம் ஒரு நபர் அங்கிருந்து வெளியேறி மூன்றாம் உலகத்திற்கு செல்வார் இதுதான் வழக்கமாக நடைபெறும் முறை. இந்த வாரம் காடர்களும், வேடர்களும் வெறித்தனமாக இம்யூனிட்டி வின் பண்ண தயாராகி வருகின்றனர்.

இதில் யார் வெற்றி பெறுவார்கள் பஞ்சாயத்துக்கு போகப் போகிறார் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் ஒரு ட்விஸ்ட் திடீரென ஏற்பட்டுள்ளது. நேற்றைய எபிசோடில் விருவிருப்பான இந்த டாஸ்க்கில் காடர்களும், வேடர்களும் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டது. எப்பொழுதும் காடர்களும், வேடர்களும் தனித்தனியாக தங்கள் குழுவுடன் விளையாடுவர்.

ஆனால் தற்பொழுது ஜோடிகளாக இணைந்து விளையாட வேண்டும் என ஒரு ஷாக் கொடுத்தார் அர்ஜுன்.மேலும் வெற்றி பெற்ற ஜோடி தவிர மற்ற அனைவரும் பஞ்சாயத்திற்கு வர வேண்டும் என்று மற்றொரு ஷாக்கையும் கொடுத்தார். இப்படி ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

பிறகு போட்டியாளர்கள் தங்கள் ஜோடிகளை தேர்வு செய்தனர் முதலில் லேடிகேஸ்-நாராயணன், பிறகு சரண்-எல்.பி, இனிகோ- உமாபதி, நந்தா- விக்ராந்த், ஐஸ்வர்யா- வனசா என அனைவரும் ஜோடியாக பிரிந்து விளையாடினார்.

இந்தக் கடுமையான போட்டியில் நந்தா- விக்ராந்த் ஜோடி வெற்றி பெற்று பஞ்சாயத்தில் இருந்து தப்பித்து விட்டனர். இன்று ட்ரைபல் பஞ்சாயத்தில் முதல் முறையாக காடர்களும், வேடர்களும் இணைந்து ஒருவரை வெளியேற்ற வேண்டும்.யார் வெளியேற போகிறார் என அறிய மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

ஒரே நாளில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கும் பார்டர் டிரைலர்.. இணையத்தை மிரள வைத்த அருண் விஜய்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் ஆரம்பகாலங்களில் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும், அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலமே தமிழ் ரசிகர்களின் கவனம் இவரது ...
AllEscort