பல பிரச்சனைகளை தாண்டி நடிகர் சிவகார்த்திகேயனின் 18வது படமாக உருவாகியுள்ள டாக்டர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. போட்டிக்கு வேறு எந்த படங்களும் இல்லாததால், டாக்டர் சோலோவாக களத்தில் இறங்கி உள்ளது. வெளியீட்டிற்கு முன்பே நல்ல லாபம் பார்த்துவிட்ட டாக்டர் படம் நிச்சயம் நல்ல வசூல் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதெல்லாம் பிறகு பார்த்து கொள்வோம். தற்போது படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் கருத்து என்ன என்பதை பார்ப்போம். முதலில் ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் தூண்ட வேண்டும். அதை ஒரு இயக்குனராக நெல்சன் மிக சரியாக செய்துள்ளார். அதேபோல் படத்தில் சஸ்பென்ஸ் மிகவும் முக்கியம்.

எந்த ஒரு இடத்திலும் படத்தின் சஸ்பென்ஸ் உடைந்து விட கூடாது. டாக்டர் படத்தின் டிரைலர் ரத்தம் தெறிக்க தெறிக்க இருந்ததை பார்த்து நிச்சயம் சீரியசான படமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்றிருப்பார்கள். ஆனால் அவர்கள் நினைத்ததற்கு அப்படியே எதிராக டாக்டர் படம் உள்ளது.

ஆமாங்க குடும்பத்துடன் சென்று பார்க்கும் ஒரு நகைச்சுவை கலந்த ஆக்சன் டிராமா தான் டாக்டர் படம். முதலில் இப்படி ஒரு படத்தை வழங்கிய இயக்குனர் நெல்சனை பாராட்டலாம். சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு ஆகியோரின் நடிப்பு அபாரம். மெரினா படத்தில் பார்த்த சிவகார்த்திகேயனுக்கும் டாக்டர் படத்தில் பார்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் பயங்கர வித்தியாசம்.

வேற லெவல் வளர்ச்சி. இவ்வளவு குறைந்த நேரத்தில் இப்படி ஒரு வளர்ச்சியா என பார்த்து வியக்கும் அளவிற்கு எஸ்கே வளர்ந்து விட்டார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் டாக்டர் படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்கள் மட்டுமே கிடைத்து வருகிறது. விஜய் ரசிகர்கள் தைரியமா இருக்கலாம். நிச்சயம் பீஸ்ட் படமும் வேற லெவல்ல இருக்கும்.