நடிகை சமந்தா விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு தற்போது மிகவும் பிஸியாகிவிட்டார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருவதுடன், நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலாவும் சென்று வருகிறார்.

சமீபத்தில் இவர் தன்னுடைய தோழியான டாக்டர் மஞ்சுளா அனாகனியின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அதில் சமந்தாவுடன் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், இயக்குனர் நந்தினி ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தப் புகைப்படத்தை சமந்தா தன்னுடைய சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார். அதில் உங்களைப் போன்ற ஒரு தோழி கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்றும், என்னுடைய கஷ்டமான காலகட்டத்தில் நீங்கள் ரொம்பவும் சப்போர்ட்டாக இருந்துள்ளீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

டாக்டர் மஞ்சுளா அனாகனி ஒரு புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர் ஆவார். பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். திரை உலகில் உள்ள பல நடிகைகளுக்கும் இவர் அட்வைசர் ஆக உள்ளார். அவரின் இந்த பிறந்தநாள் விழாவில் சமந்தா அவருக்கு பல லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்களை வழங்கியுள்ளார்.

விவாகரத்து முடிவுக்கு பிறகு சமந்தா கொண்டாடும் முதல் பார்ட்டி இதுதான். மிகவும் மன உளைச்சலில் இருந்த சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர இந்தி மொழியில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.