டைட்டிலுக்கே டீசர் விட்ட ஒரே ஆளு நம்ம விஷால் தான்.. வரவர ரொம்ப ஓவரா போறீங்க பாஸ்.!

நடிகர் விஷால் தற்போது ஆர்யாவுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து வீரமே வாகை சூடும் மற்றும் விஷால் 32 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று விஷாலின் 32வது படத்திற்கான தலைப்பு அறிவிக்கப்பட்டது.

விஷால் மற்றும் சுனைனா இணைந்து நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கி வருகிறார். விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ராணா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து வரும் இப்படத்திற்கு லத்தி சார்ஜ் என தலைப்பு வைத்துள்ளனர்.

முதல் முறையாக விஷால் நடிக்கும் பான் இந்தியா படமாக லத்தி சார்ஜ் படம் உருவாக உள்ளதாம். ஆம் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. இப்போ விஷயம் அது இல்லைங்க. பொதுவா ஒரு படத்தோட தலைப்ப அறிவிக்கனும்னா தலைப்புடன் உள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர தான் வெளியிடுவாங்க.

நம்ம விஷாலும் அப்படி தான் வெளியிட்டார். ஆனால் கூடவே டைட்டிலுக்கு தனி டீசரும் விட்டிருக்காரு. பொதுவா ஒரு படத்தோட டிரைலர் முன்னோட்டமா தான் டீசர் விடுவாங்க. ஆனா விஷால் புதுசா டைட்டிலுக்கே டீசர் விட்ருக்காரு. இதை பார்த்த ரசிகர்கள் டைட்டில் என்னமோ நல்ல தான் இருக்கு ஆனா டீசர்லாம் கொஞ்சம் ஓவர்பா என கமெண்ட் கொடுத்துள்ளனர்.

மேலும் சிலர் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள அலப்பறையா? ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாதுப்பா என கலாய்த்து வருகிறார்கள். அவர்கள் கூறுவதும் சரிதான் இப்போவே இவ்ளோ பில்டப் கொடுத்துட்டு ஒருவேளை படம் வெளியானதும் சரியா ஓடாம போயிட்ட ஒரே அசிங்கமா போச்சு குமாரு நிலமை தான் நம்ம விஷாலுக்கு ஏற்படும்.

எனவே பெட்டர் நம்ம விஷால் இந்த மாதிரி சீன் போடறது குறைச்சுக்கறது தான் அவருக்கு நல்லதுனு ரசிகர்கள் சொல்றாங்க. தயாரிப்பு நிறுவனம் பெரிய இடம் என்பதால் வியூஸ் ஒரு பக்கம் பட்டையை கிளப்பி வருகிறது.