சின்னத்திரையை பொருத்தவரை அனுதினமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தவறாமல் பார்ப்பதற்கு இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

ஆகையால் விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் பிரபலம் செந்தில் கதாநாயகனாகவும், ரக்ஷிதா கதாநாயகியாகவும் நடிக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியல் கடந்த சில வாரங்களாகவே டிஆர்பி ரேட்டிங்கில் கடும் சரிவை சந்தித்து கொண்டிருக்கிறது.

அத்துடன் அந்த சீரியலின் கதாநாயகியான ரக்ஷிதா விலக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது. அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ரக்ஷிதா மற்றும் சீரியல் குழுவினர்கள் அமைதி காப்பதால், வெளியான தகவல் உண்மை என்று ரசிகர்கள் எண்ண தொடங்கிவிட்டனர்.

அத்துடன் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் கடைசி இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலை நிறுத்திவிட்டு, அதே நேரத்தில் வேறு ஒரு சீரியலை ஒளிபரப்பு செய்ய விஜய் டிவி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

அதற்காகவே கிராமத்து பின்னணியில் விவசாயத்தை மையப்படுத்தி ‘முத்தழகு’ என்ற நெடும் தொடரை விரைவில் துவங்க உள்ளது. எனவே நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் விட்டதைப் பிடிக்க முத்தழகு சீரியலை தரையிறக்க விஜய் டிவி நிர்வாகம் பக்கா பிளான் போட்டு அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

எனவே புதிய சீரியலாக ஒளிபரப்பாக உள்ள முத்தழகு சீரியலை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். அதேசமயம் சரவணன் மீனாட்சி சீரியலில் இருந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் வரை செந்தில் நடிப்பை பார்ப்பதற்கென்றே தனி ரசிகை கூட்டம் இருப்பதால் இந்த தகவலானது அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.