டாப் 5 ஹீரோக்களின் படுதோல்வியான படங்கள்.. தியேட்டரை விட்டு தெறித்து ஓடிய ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா ஆகியோரின் படங்கள் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அவ்வாறு இவர்கள் நடிப்பில் வெளியாகும் படங்கள் சில சமயம் தோல்வியும் சந்தித்துள்ளது. அவ்வாறு இந்த டாப் நடிகர்களுக்கு மிக மோசமான தோல்வியைத் தந்த படத்தை பார்க்கலாம்.

ரஜினிகாந்த் : தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடைய படங்கள் எல்லாம் வசூல் சாதனை படைத்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகும். ரஜினியின் திரை வாழ்க்கையில் மிக மோசமான தோல்வி அடைந்த படம் லிங்கா. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்கா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் 2014 லிங்கா படம் வெளியானது. லிங்கா படம் பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

கமலஹாசன் : உலகநாயகன் கமலஹாசன் பன்முகத்தன்மை கொண்ட நடிகர். இவர் கிட்டத்தட்ட 230 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கமல்ஹாசனின் படங்களில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த படம் உத்தம வில்லன். ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த 2015 ஆம் ஆண்டு உத்தம வில்லன் படம் வெளியானது. இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

அஜித் குமார் : தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ள நடிகர் அஜித் குமார். இவருடைய திரை வாழ்க்கையிலேயே மிக மோசமான தோல்வி அடைந்த படம் ஆழ்வார். அஜித், அசின், விவேக் ஆகியோர் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆழ்வார். இப்படம் படு மோசமான தோல்வி அடைந்தது.

விஜய் : சமீபகாலமாக தளபதி விஜய்யின் படங்கள் நல்ல வரவேற்பு பெற்ற பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்து வருகிறது. விஜய் நடிப்பில் வெளியாகி மிக மோசமான தோல்வியடைந்த படம் சுறா. ராஜ் குமார் இயக்கத்தில் விஜய், தமன்னா, வடிவேலு ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். சுறா படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

சூர்யா : சூர்யா சமீபகாலமாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சூரரை போற்று, ஜெய் பீம் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சூர்யா நடிப்பில் மிக மோசமான தோல்வியடைந்த படம் அஞ்சான். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, வித்யுத் ஜம்வால் ஆகியோர் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான அஞ்சான் படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது.