டாப் 10 சீரியலில் முதல் இடத்தைப் பிடித்த சன் டிவி.. பின்னுக்குத்தள்ளப்பட்ட பாரதிகண்ணம்மா!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களுக்கும் மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. தற்போது டாப் 10 சீரியல்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் எப்பொழுதும் டாப் 10 பட்டியலில் விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’அல்லது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ போன்ற சீரியல்கள்தான் முதலிடத்தை பிடிக்கும்.

ஆனால் சற்றும் எதிர்பார்க்காமல் சன் டிவியின் ‘வானத்தைப்போல’ சீரியல் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பெற்று சாதித்துள்ளது. முதலிடத்தைப் பெற்ற வானத்தைப்போல சீரியல் பாசமலர்கள் ஆன ஒரு அண்ணன் தங்கையின் பாசப்பிணைப்பை எடுத்தியம்பும் கதைக்களமாக உள்ளது. இதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தை சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் ‘கயல்’  சீரியல் பெற்று அசத்தியுள்ளது.

இதில் கதாநாயகியாக நடிகை சைத்ராவும், கதாநாயகனாக நடிகர் சஞ்சீவும் நடித்து கலக்கி வருகின்றன. மூன்றாம் இடத்தையும் சன் டிவியின் ‘சுந்தரி’ சீரியலே பெற்றுள்ளது. இந்த சீரியல் ஒரு நிறம் குறைவான, கருப்பான கிராமத்துப் பெண், ஒரு பணக்கார பையனை திருமணம் செய்கிறார்.

ஆனால் அவன் இரண்டாவதாக வேறொரு பெண்ணை அவளுக்கு தெரியாமல் மணந்து கதாநாயகிக்கு துரோகம் செய்து வருவது இதன் முக்கிய கதைக்களமாகும். மேலும் எப்பொழுதும் நம்பர் ஒன் சீரியலாக வலம் வந்த விஜய் டிவியின் ‘பாரதிகண்ணம்மா’ சீரியல் சற்று பின்னடைந்து நான்காம் இடத்தை பிடித்துள்ளது. மீண்டும் ஐந்தாம் இடத்தை சன் டிவியின் ‘ரோஜா’ சீரியல் பிடித்து வெற்றிக்கனியை எட்டியுள்ளது.

அதைத்தொடர்ந்து ஆறாமிடத்தில் விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியலும் ஏழாமிடத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலும் இடம்பிடித்துள்ளன. மேலும் எட்டாமிடத்தில் சன்டிவியின் ‘கண்ணான கண்ணே’ சீரியலும், ஒன்பதாமிடத்தில் ‘அபியும் நானும்’ சீரியலும் உள்ளன.

இதனைத் தொடர்ந்து பத்தாம் இடத்தில் மீண்டும் விஜய் டிவியின் ‘ராஜா ராணி2’ சீரியல் இடம்பிடித்துள்ளது. இவ்வாறு சன் டிவியும் விஜய் டிவியும் போட்டி போட்டு சீரியல்களை களமிறக்கி டாப் 10 பட்டியலில் வேறு சேனல்களின் சீரியலுக்கு இடம் கொடுக்காமல் தங்கள் இடத்தை தக்கவைத்து வருகின்றன.