சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் அனைத்து நடிகைகளும் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிப்பதில்லை. ஆனால் பிரியா பவானி சங்கர் அந்த வகையில் அதிர்ஷ்டசாலி என்று தான் கூற வேண்டும். சாதாரண செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் சின்னத்திரை நடிகையாக வளர்ந்து தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

இவரின் இந்த வளர்ச்சி அபரிமிதமான வளர்ச்சியாகும். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கியதால் தற்போது அனைவரின் பேவரைட் நாயகியாகவே வலம் வருகிறார்.

தற்போது கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் குருதியாட்டம், ஹாஸ்டல், ருத்ரன், இந்தியன் 2 , 10 தல உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். அதுவும் சாதாரண கூட்டணி அல்ல பிரம்மாண்ட கூட்டணி. அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா உடன் புதிய படம் ஒன்றில் பிரியா பவானி சங்கர் நயாகியாக நடிக்க உள்ளார். இப்படத்தை மனம், 24 உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் விக்ரம் குமார் இயக்க உள்ளாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சமீபத்தில் பிரியா பவானி சங்கர், ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஓ மணப்பெண்ணே படக்குழுவினருடன் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவும் பிரியா ஒப்பந்தமாகி உள்ளார். இவரின் இந்த அசுர வளர்ச்சி மற்ற நடிகைகளுக்கு சற்று பொறாமையை ஏற்படுத்தி உள்ளதாம்.