சின்னத்திரையில் பலவிதமான திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள், தொடர்ந்து தனது டாப் இடத்தை தக்க வைத்து கொண்டே வருகிறது. இச்சூழலில் ஒவ்வொரு நாளின் எபிசொடிற்கு பிறகு வலைத்தளத்தில் ரசிகர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களும், நெட்டிசன்களின் நகைச்சுவை கலந்த பதில்களும் காண்பதற்கு சுவாரசியமாக உள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியலை பார்க்கும் ரசிகர் ஒருவர், பாரதியும் கண்ணம்மாவும் இந்த ஜென்மத்துல சேர மாட்டாங்க இந்த சீரியலில் வில்லியே தான் ஜெயிப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளார். இன்னொருவர் ‘முதலில் பாரதியை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க’ என்று கடுப்பில் கமெண்ட் அடித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடந்த வாரம் ஷீலா அம்மா இறந்து போனதற்கு செய்யப்பட்ட இறுதி சடங்குகளை தொடர்ந்து, அடுத்ததாக என்ன நடக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இந்த வாரம், தற்போது ஓடிய எபிசோடில் ரசிகர்களை திருப்தி படுத்தும் அளவிற்கு காட்சிகள் இருக்கிறது என்று கூறலாம். ரசிகர்களின் மத்தியில் கண்ணனை ஏற்றுக்கொள்ளும்படியே தொடர்ந்து கமெண்ட்டுகள் வெளியாகி வருகிறது.

பாக்யலக்ஷ்மி தொடரை பார்த்து வரும் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு ‘பாவம் பாக்கிய’ என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருக்கும் என்றும், எப்ப பாத்தாலும் பாக்கியலட்சுமி, வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டே இருக்கிறார் என்றும், எப்பவுமே பொண்டாட்டிகிட்ட இஞ்சி தின்ன குரங்கு போல பேசுரயே எப்படி தாயா உன்னால மட்டும் முடியுது என்றும் கேலி செய்து வருகின்றனர்.

ராஜா ராணி2 சீரியல் பார்த்து வரும் ரசிகர் ஒருவர், இப்பதான் ரொமான்ஸ் காட்சிகுள் அடி எடுத்து வச்சிருக்காங்க, தயவுசெய்து எந்த பூகம்பத்தையும் கிளப்பிவிட்டு கதையை சொதப்பிராதிங்க என்றும், இது போன்ற காட்சிகளுடன் வெகுசிறப்பாக ராஜா ராணி தொடர் தொடரட்டும் என்றும் ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

ரோஜா சீரியலில் புதிதாக ஏற்பட்டுள்ள ‘மெமரி லாஸ்’ என்கிற டாபிக்கால் ரசிகர்கள் சற்று கடுப்பாகி உள்ளனர். பழைய நினைவுகள் எப்போது செண்பகத்திற்கு வருவது, தாயும், மகளும் எப்போது ஒன்று சேர்வது என்று பலரும் இவங்களுக்கு நினைவு வரத்துக்குள்ள இன்னும் 500 எபிசோடு இழுத்து விடுவார்கள் என்றும், இவருக்கு நினைவு வரத்துக்குள்ள நமக்கெல்லாம் வயசாயிடும்பா என்பது போன்றும் சற்றே கேலி கலந்த கமெண்ட்டுகளைப் பதிவிட்டு கொண்டு வருகின்றனர் ரசிகர்கள்.