டாப் ஆங்கிள் செல்பியை வெளியிட்ட வித்யுலேகா.. மறுபடியும் உடல் எடையை ஏற்றிய புகைப்படம்

தமிழ் சினிமாவில் நீதானே பொன்வசந்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யூலேகா. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான ஜில்லா, வீரம் மற்றும் இனிமேல் இப்படித்தான் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இவரது பப்ளி முகமும் காமெடி பேச்சும் ரசிகர்களுக்கு பிடித்துப் போனது அதனால் அனைத்து இயக்குனர்களும் தங்களது படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வித்யுலேகாவிற்கு வைத்தனர் அதன்மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

இருந்தாலும் தமிழை விட இவர் தெலுங்கில் அதிகப்படியான வரவேற்பதாக தொடர்ந்து தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக வித்யுலேகா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் உடல் எடையை குறைத்த வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்த புகைப்படம் மற்றும் வீடியோ பார்த்த ரசிகர் பலரும் ஆச்சரியத்தில் இருந்து நேரடியாக இவ்வளவு குறுகிய காலத்திலேயே குறைத்தார் என சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வந்தனர்.

தற்போது வித்யுலேகா டாப் ஆங்கிளில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி என்னுடைய சூப்பர் ஸ்டார் என பதிவிட்டுள்ளார். தற்போதைய இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.