கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ரேஷ்மா ஜீ தமிழில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார் அதன் மூலம் பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார். தன்னுடைய குறும்புத்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.

சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய காதலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். அதாவது பூவே பூச்சூடவா சீரியலில் இவருடன் நடிக்கும் மதன் பாண்டியனை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்தார்.

தற்பொழுது பூவே பூச்சூடவா சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் கலர்ஸ் தமிழில் அபிடெய்லர் என்னும் சீரியலில் மதன், ரேஷ்மா ஜோடி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

தற்போது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது காதலரான மதன் பெயரை மேடி எனும் பெயரில் பச்சை குத்தியுள்ளார். இதனை ரசிகர்கள் ரசித்தாலும் எப்பொழுது திருமண அறிவிப்பை வெளியிடுவீர்கள் என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.