டாட்டா காட்ட தயாராகும் சூப்பர் ஸ்டார்.. ரஜினியை நம்பாமல் புது ரூட்டை கையிலெடுத்த நெல்சன்

ரஜினி அண்ணாத்தா படத்தின் வெற்றிக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. தற்காலிகமாக தலைவர் 169 என பெயரிட்டுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

நெல்சன் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.நெல்சனின் டாக்டர் படம் வசூலில் வேட்டையாடியது போல் பீஸ்ட் படமும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தை முடித்த கையோடு நெல்சன், ரஜினி படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தலைவர் 169 படம் அக்டோபர் மாதத்திற்கு மேல் தான் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் சமீபத்திய நடந்த பேட்டி ஒன்றில் இதை உறுதி செய்யும் வகையில் தான் பேசியிருந்தார்.

மேலும், தலைவர் 169 படத்தின் படப்பிடிப்புக்கு முன்னதாக ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தாமதமாக வாய்ப்புகள் உள்ளது. மேலும் இப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படயுள்ளது.

அதனால் இதற்கான செட் பணிகள் செய்ய தாமதமாகும் என கூறப்படுகிறது. இதனால் தலைவர் 169 படப்பிடிப்பு மிகவும் தாமதம் ஆவதால் நெல்சன் கவலையில் உள்ளார்.

இதையெல்லாம் யோசித்து சுதாரித்த நெல்சன் சூப்பர் ஸ்டாரை நம்பினால் அவர் டாட்டா காட்டிவிட்டு அமெரிக்கா சென்று விடுவார். அதனால் கிட்டத்தட்ட ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வீணாகிவிடும் என்று வேறு ஒரு திட்டம் போட்டு வருகிறார்.

எடுத்த எடுப்பிலேயே சிவகார்த்திகேயன், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் படம் முடிந்த நிலையில் தலைவர் 169 படத்திற்கு இவ்வளவு இடைவெளி உள்ளதால் நெல்சன் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளார். அதற்குள் வேறு ஒரு பிரபல நடிகருக்கு கதை எழுதலாம் என்ற யோசனையிலும் உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.