டாக்டர் ரிலீசுக்காக சம்பளத்தை வாரி கொடுத்த சிவகார்த்திகேயன்.. ஆபரேஷன் சக்சஸ் ஆனால் பேஷண்ட் செத்துட்டான்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன்பு பல விதமான பிரச்சனைகளை சந்தித்தது. ஆனால் சிவகார்த்திகேயன் அனைத்து பிரச்சினைகளையும் சமாளித்து படத்தை திரையரங்கில் தான் வெளியிடுவேன் என கூறினார்.

சொன்னபடி படமும் திரையரங்கில் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நெல்சன் காமெடி, ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் என அனைத்தையும் ஒன்று கலந்து ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்தார். சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையில் இப்படம் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் பணக்காரர் ஆகிரரோ இல்லையோ தற்போது தொடர்ந்து கடனாளியாகி வருகிறார். ஏற்கனவே வேலைக்காரன், சீமராஜா மற்றும் ஹீரோ ஆகிய படங்களின் தோல்வியால் சிவகார்த்திகேயன் கடனில் சிக்கினார். இந்த கடன்களை அடைப்பதற்காக கே ஜே ஆர் ராஜேஷுக்கு சம்பளம் வாங்காமல் படங்கள் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். அப்படித்தான் டாக்டர் படத்திற்கும் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

ஆனால் டாக்டர் படத்திற்கு கடன் கொடுத்தவர்கள் படத்தின் ரிலீஸுக்கு முன்பு ஒருசில பிரச்சனைகள் செய்ததால் வேறுவழியின்றி சிவகார்த்திகேயன் உதயநிதி ஸ்டாலின் மூலியமாக பிரச்சினையை முடிக்க முடிவு செய்துள்ளார். ஆனால் எதிர்பார்த்த மாதிரி பிரச்சனை சுமூகமாக முடியவில்லை.

அதனால் சிவகார்த்திகேயன் மதுரை அன்புக்கு 27 கோடி ரூபாய் பைனான்சியர்கள் மூலம் கொடுத்துள்ளார். அதன்பிறகுதான் டாக்டர் படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடன் அடைக்க பல படங்கள் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இந்த படம் மூலம் மேலும் கடனாளி ஆகியுள்ளார்.

ஆனால் சிவகார்த்திகேயன் ஒரு படத்திற்கு 30 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். கிட்டத்தட்ட இவர் 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆரம்பத்தில் சம்பளம் குறைவாக வாங்கி இருந்தாலும் தற்போது ஒரு படத்திற்கு அதிகப்படியான சம்பளம் வாங்குகிறார். எப்படிப்பார்த்தாலும் வருடத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்கி விடுவார். அப்படி இருக்கும் போது இவர் ஏன் கடனாளி மாதிரியாக காட்ட வேண்டுமென கூறிவருகின்றனர். வருடத்திற்கு 2 படங்கள் நடித்தால் கூட கடனை முழுமையாக முடித்து இருக்கலாம் என கூறி வருகின்றனர்.