டாக்டர் பண்ணிய வசூல் வேட்டை.. அஜித், விஜய்க்கே டப் கொடுக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு

டாக்டர் என்ற ஒரு படம் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்து விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். குறுகிய கால கட்டத்தில் இப்படி ஒரு வளர்ச்சியை யாருமே ஏன் சிவகார்த்திகேயனே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று தான் கூற வேண்டும்.

ஒரு சாதாரண தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் அடைந்துள்ள உயரம் மிகவும் அசாதாரணமானது. இதற்காக பல தடைகள், அவமானங்கள், நிராகரிப்புகள் என பல்வேறு சிக்கல்களை கடந்து தான் சிவகார்த்திகேயன் இந்த இடத்தை அடைந்துள்ளார்.

அப்படி என்ன சாதனை என்று தானே நினைக்கிறீர்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் 25 நாளில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த செய்தியை படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது என்ன அவ்வளவு பெரிய சாதனையா? இதற்கு முன் எந்த ஒரு நடிகரின் படமும் இவ்வளவு வசூல் செய்ததில்லையா என நீங்கள் கேட்கலாம்.

நிச்சயமாக பல நடிகர்களின் படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஆனால் அவர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களாக இருப்பார்கள். தற்போது முதல் முறையாக ஒரு வளர்ந்து வரும் இளம் நடிகரின் படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது இதுவே முதல் முறை.

அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் படங்களிலேயே டாக்டர் படம் தான் அதிக வசூல் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தயாரிப்பு நிறுவனம் மூலம் கடனில் சிக்கி தவிக்கும் சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் படத்தின் வெற்றி சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது என்று தான் கூற வேண்டும்.

வெளியாவதற்கு முதல் நாள் வரை பல பிரச்சனைகளை சந்தித்த டாக்டர் படம் வெளியாகி இப்படி ஒரு இமாலய வெற்றி பெற்றதோடு நடிகர் சிவகார்த்திகேயனை ஒரு மாஸ் ஹீரோ லெவலுக்கு உயர்த்தி உள்ளது என்பது தான் உண்மை. டாக்டர் படம் இப்படி ஒரு பிளாக் பஸ்டர் படமாக அமையும் என படக்குழுவினர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.