டாக்டர் பட ரிலீசுக்கு வந்த சோதனை.. குடைச்சல் கொடுக்கும் பிரபல தொலைக்காட்சி

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவாகியுள்ளது டாக்டர் படம். இந்த படத்தில் வினய் ராய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது தளபதி வைத்து இயக்கும் நெல்சன் திலீப் குமார் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

டாக்டர் படம் பல சர்ச்சைக்கு பின் தற்போது அக்டோபர் மாதம் 13, 14 தேதிகளில் சரஸ்வதி பூஜையில் வெளிவரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதில் ரிலீஸ் தேதியில் தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

என்னவென்றால் தீபாவளிக்கு தொலைக்காட்சி உரிமத்தை தட்டி தூக்கிய சன் டிவி(ரெட் ஜெயின்ட்) தீபாவளிக்கு கண்டிப்பாக வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் டிஸ்ட்ரிபியூட்டர் தரப்பில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

என்னவென்றால் ஒரு மாதம் கூட இடைவெளி இல்லாத சூழ்நிலையில் எப்படி தொலைக்காட்சியில் வெளியிடலாம் என்று பெரும் பிரச்சனை செய்துள்ளனர். அதாவது டாக்டர் படம் வெளியீட்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றால் தான் வசூல் ரீதியாக வெற்றி பெறும்.

அதற்கு கால தாமதமாகும் என்பதால் தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு மாதத்தில் தொலைக்காட்சியில் வெளியிடுவது சரியானது அல்ல என்பது போன்ற டிஸ்ட்ரிபியூட்டர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்குதான் படம் வருதேன்னு எல்லாம் தியேட்டரில் பார்க்காமல் போக வாய்ப்புள்ளதாம்.

இதனால் டாக்டர் படம் வெளியிடுவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், சிவகார்த்தியேன் தலையில் இடி விழுந்தது போல் உள்ளதாம். முக்கியமாக நெல்சன் திலீப்குமார் தற்போது தளபதி வைத்து இயக்குவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே தான் போகிறது.

ஒரு பைசா கூட வேண்டாம்.. சமந்தா எடுத்த முக்கிய முடிவு!

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பிரபல நடிகை சமந்தா, தமிழில் அதர்வாவுடன் பானா காத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன்பிறகு இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த ...
AllEscort