டாக்டர் பட நடிப்பை வியந்து பார்த்த தளபதி.. பீஸ்ட் படத்தில் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த விஜய்

இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் பலர் நடித்திருந்தாலும் அனைவரின் பாராட்டையும் தட்டிச் சென்றது என்னவோ காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி தான்.

டாக்டர் படம் பார்த்த அனைவருமே படத்தில் யோகி பாபுவை விட ரெடின் கிங்ஸ்லி தான் அதிக ஸ்கோர் செய்திருப்பதாக கூறுகிறார்கள். இதுவரை யோகி பாபுவின் காமெடியை மட்டுமே ரசித்து வந்த ரசிகர்கள் தற்போது இவரின் காமெடியையும் ரசிக்க தொடங்கி விட்டார்கள். டாக்டர் படத்திற்கு முன்பே ரெடின் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் தான் அவர் அதிகம் கவனம் பெற்றுள்ளார்.

ரசிகர்களை போலவே நடிகர் விஜய்யும் ரெடினின் காமெடியை பார்த்து ரசித்திருப்பார் போல. ஆமாங்க டாக்டர் படத்துல ரெடினின் காமெடியை பார்த்து மிரண்டு போன நம்ம தளபதி விஜய் அவரை அழைத்து பாராட்டியதோடு பீஸ்ட் படத்தில் அவருக்கு வாய்ப்பும் அளித்துள்ளாராம். எனவே டாக்டர் படத்தை போலவே பீஸ்ட் படத்திலும் ரெடினின் காமெடியை பார்த்து வயிறு குலுங்க சிரிக்கலாம்.

டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் தான் பீஸ்ட் படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல பீஸ்ட் படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லியும் பீஸ்ட் படத்தில் நடித்து உள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் நிலவி வந்த நிலையில் நமக்கு புதிதாக ஒரு காமெடி நடிகர் கிடைத்து விட்டார். இதுவரை யோகி பாபு மட்டுமே சோலோ கிங்காக வலம் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு போட்டியாக ரெடின் கிங்ஸ்லி உருவாகி உள்ளார் என்று தான் கூற வேண்டும்.